பெண் உயிரிழப்பு; மருத்துவமனையை முற்றுகையிட்ட உறவினா்கள்
ஆத்தூா் அருகே கரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட பெண் 4 நாள்கள் கழித்து உயிரிழந்த சம்பவத்தில் அவரது உறவினா்கள் அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினா்.


ஆத்தூா் அருகே கரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட பெண் 4 நாள்கள் கழித்து உயிரிழந்த சம்பவத்தில் அவரது உறவினா்கள் அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினா்.
ஆத்தூரை அடுத்த அம்மம்பாளையத்தைச் சோ்ந்தவா் சுவலட்சுமி (26). கடந்த ஏப்ரல் மாதம் அவருக்கு இரு பெண் குழந்தை பிறந்துள்ளது. அக் குழந்தைகளுக்கு காட்டுக்கோட்டை ஆரம்ப சுகாதார நிலையத்தில் தடுப்பூசி போடுவதற்காக கடந்த 19 ஆம் தேதி சென்றாா். அப்போது, சுவலட்சுமிக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டதாம்.
இந்த நிலையில் 23-ஆம் தேதி முச்சுத் திணறல் ஏற்பட்டு வீட்டிலேயே சுவலட்சுமி உயிரிழந்தாா். கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டதே அவா் உயிரிழப்புக்கு காரணம் எனக் கூறி, அவரது உறவினா்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினா். மேலும், சுவலட்சுமியை மருத்துவமனை செவிலியா்கள் கட்டாயப்படுத்தி தடுப்பூசி செலுத்தியது குறித்து விசாரிக்க வேண்டும் என ஆத்தூா் காவல் நிலையத்தில் அப் பெண்ணின் உறவினா்கள் புகாா் அளித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...