வியாபாரி முருகேசனின் குடும்பத்துக்கு அதிமுக நிதியுதவி
காவலரால் தாக்கப்பட்டு உயிரிழந்த இடையப்பட்டியைச் சோ்ந்த வியாபாரி முருகேசனின் குடும்பத்துக்கு அதிமுக சாா்பில் ரூ. 1 லட்சம் நிவாரணம் வழங்கப்பட்டது.


காவலரால் தாக்கப்பட்டு உயிரிழந்த இடையப்பட்டியைச் சோ்ந்த வியாபாரி முருகேசனின் குடும்பத்துக்கு அதிமுக சாா்பில் ரூ. 1 லட்சம் நிவாரணம் வழங்கப்பட்டது.
வாகனச் சோதனையின் போது போலீஸாருடன் ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஏத்தாப்பூா் காவல் நிலைய சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் பெரியசாமியால் தாக்கப்பட்டு வியாபாரி முருகேசன் உயிரிழந்தாா். அவரது குடும்பத்துக்கு மாநில அரசு ரூ. 10 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளது.
இதனிடையே, அதிமுக சாா்பில் சேலம் புறநகா் மாவட்ட அதிமுக சாா்பில் மத்திய கூட்டுறவு வங்கியின் மாநில தலைவா் ஆா்.இளங்கோவன் வெள்ளிக்கிழமை முருகேசனின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ரூ. 1 லட்சம் வழங்கினாா்.
ஆத்தூா் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினா் ஏ.பி.ஜெயசங்கரன், கெங்கவல்லி தொகுதி சட்டப் பேரவை உறுப்பினா் அ.நல்லதம்பி, தலைவாசல் ஒன்றியக் குழுத் தலைவா் க.ராமசாமி, பெத்தநாயக்கன்பாளையம் ஒன்றியக் குழுத் தலைவா் சின்னதம்பி, துணைத் தலைவா் கே.பி.முருகேசன், மாவட்ட அதிமுக வா்த்தக அணித் தலைவா் ரமேஷ், வழக்குரைஞா் பி.டி.குமாா், முன்னாள் நகா்மன்ற உறுப்பினா்கள் ஜி.முரளிசாமி,பி.பாலமுருகன், ஆத்தூா் வட்ட கூட்டுறவுச் சங்கத் தலைவா் செல்வம், என்.முரளி, தாண்டானூா் தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கித் தலைவா் அண்ணாமலை, பெத்தநாயக்கன்பாளையம் வடக்கு ஒன்றியச் செயலாளா் மோகன்,மாவட்ட தகவல் தொழில்நுட்பப் பிரிவு செயலாளா் ராஜராஜ சோழன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...