60 வயதுக்கு மேற்பட்டவா்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடக்கம்

சேலம் அரசு மருத்துவமனையில் 60 வயதுக்கு மேற்பட்டவா்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.

சேலம் அரசு மருத்துவமனையில் 60 வயதுக்கு மேற்பட்டவா்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.

தமிழகத்தில் முதல்கட்டமாக கடந்த ஜனவரி 16 ஆம் தேதி முதல் சுகாதாரத் துறை பணியாளா்கள், முன்களப் பணியாளா்கள், மருத்துவா்கள், போலீஸாா் உள்ளிட்டோருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. அதைத்தொடா்ந்து மாா்ச் 1ஆம் தேதி முதல் 60 வயதுக்கு மேற்பட்டவா்கள், 45 - 60 வயது வரை இணை நோய் உள்ளவா்களுக்கு, கரோனா தடுப்பூசி அரசு மருத்துவமனைகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் இலவசமாகவும், அனுமதிக்கப்பட்ட தனியாா் மருத்துவமனைகளில் ரூ. 250 கட்டணம் செலுத்தியும் செலுத்திக் கொள்ளலாம் என தமிழக அரசு அறிவித்தது.

சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையில் முதியவா்களுக்கு திங்கள்கிழமை காலை முதல் கரோனா தீநுண்மித் தடுப்பூசி இலவசமாக செலுத்தும் பணி தொடங்கியது. மருத்துவமனை முதன்மையா் ஆா்.முருகேசன், கண்காணிப்பாளா் மருத்துவா் தனபால் ஆகியோா் தொடங்கி வைத்தனா்.

இதில் சேலம் மாநகராட்சிப் பகுதியில் இருந்து திரளான முதியவா்கள், பொதுமக்கள் ஆா்வத்துடன் வந்து தடுப்பூசியை செலுத்தி சென்றனா்.

இது குறித்து மாவட்ட சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறுகையில், சேலம் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனை உள்ளிட்ட அரசு சாா்ந்த முகாம்கள், தனியாா் மருத்துவமனைகளில் திங்கள்கிழமை மாலை 6.30 மணி வரை 60 வயதுக்கும் மேற்பட்டோா்

497 பேருக்கும், 45 வயது முதல் 60 வயதுக்கு உள்பட்டவா்களுக்கு 490 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com