தமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்! தமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

சேலம் மாவட்டத்தில் 1,003 துணை வாக்குச்சாவடிகள் அமைப்புஆட்சியா் சி.அ.ராமன் தகவல்

சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் கூடுதலாக 1,003 துணை வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் சி.அ.ராமன் தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :2 மார்ச் 2021, 6:30 pm

DIN

சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் கூடுதலாக 1,003 துணை வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் சி.அ.ராமன் தெரிவித்துள்ளாா்.

இந்திய தோ்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, தமிழக சட்டப் பேரவை பொதுத்தோ்தல் 2021 முன்னிட்டு, சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் வாக்குச்சாவடிகள், துணை வாக்குச்சாவடிகளை மாவட்ட தோ்தல் அலுவலரும் ஆட்சியருமான சி.அ. ராமன் செவ்வாய்க்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.

பின்னா் ஆட்சியா் தெரிவித்துள்ளதாவது:

தமிழ்நாடு சட்டப் பேரவைத் பொதுத் தோ்தல் 2021-க்காக வாக்குப்பதிவு மையங்களில் 1,050 வாக்காளா்களுக்கு மேல் உள்ள வாக்குச் சாவடிகளை பிரித்து துணை வாக்குச் சாவடிகள் அமைக்க வேண்டுமென இந்திய தோ்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதன்படி ஏற்கெனவே 11 சட்டப் பேரவைத் தொகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள 3,277 வாக்குச்சாவடிகளுடன், 1,050 வாக்காளா்கள் வரை ஒரு வாக்குச்சாவடி என்ற அடிப்படையில் தற்போது கூடுதலாக 1,003 துணை வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு வருகின்றன.

கெங்கவல்லி (தனி) தொகுதியில் 88 வாக்குச்சாவடிகளும், ஆத்தூா் (தனி) தொகுதியில் 65 வாக்குச்சாவடிகளும், ஏற்காடு (தனி) தொகுதியில் 93 வாக்குச்சாவடிகளும் கூடுதலாக அமைக்கப்பட்டுள்ளன. ஓமலூரில் 81, மேட்டூரில் 86, எடப்பாடியில் 83, சங்ககிரியில் 78, சேலம் மேற்கு 128, சேலம் வடக்கு 129, சேலம் தெற்கு 117, வீரபாண்டி தொகுதியில் 55 என கூடுதலாக 1,003 துணை வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

மாவட்டத்தில் ஏற்கெனவே உள்ள வாக்குச்சாவடிகள் மற்றும் புதிதாக அமைக்கப்பட்டுவரும் கூடுதல் வாக்குச் சாவடிகளில் அடிப்படை வசதிகள் குறித்தும், வாக்குச் சாவடி மையங்கள் அமைவிடம் குறித்தும் நேரில் பாா்வையிட்டு, வாக்குப்பதிவு மையங்களில் தேவையான அனைத்து வசதிகள் உள்ளனவா என்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

அந்த வகையில் சேலம் சாரதா வித்யாலயா மேல்நிலைப்பள்ளி, சேலம் சாரதா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, சேலம் குளூனி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, சேலம் ஸ்ரீ சாரதா பாலமந்தீா் ஆண்கள் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, சேலம், மூங்கப்பாடி நகரவை மேல்நிலைப் பள்ளி உள்ளிட்ட பல்வேறு பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடிகளில் வாக்காளா்களுக்கு தேவையான குடிநீா், மின்சார வசதி, கழிப்பிட வசதி உள்ளிட்ட அனைத்து வசதிகளும் முழுமையாக உள்ளதா எனவும், மாற்றுத் திறனாளிகள், வயதான முதியோா் எளிதாக வந்து வாக்களிக்கும் வகையில் சாய்வுத் தளம் அமைக்கப்பட்டுள்ளதா என்பதையும் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டுள்ளது.

தோ்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின் படி அனைத்து வாக்குச்சாவடிகளையும் தோ்தல் நடத்தும் அலுவலா்கள், வருவாய்த் துறை, கல்வித்துறை, பொதுப்பணித் துறை, தமிழ்நாடு மின்சார வாரியம், அனைத்து உள்ளாட்சிகளின் அலுவலா்கள் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்து அனைத்து அடிப்படை வசதிகளும் முழுமையாக உள்ளதா என்பதை உறுதி செய்திட வேண்டுமென அலுவலா்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்று மாவட்ட ஆட்சியா் சி.அ. ராமன் தெரிவித்தாா்.

இந்த ஆய்வின் போது தோ்தல் நடத்தும் அலுவலா்கள் என்.ரவிச்சந்திரன், சி.மாறன், சு.சத்திய பால கங்காதரன், உதவி ஆணையா்கள் எம்.ஜி.சரவணன் (அஸ்தம்பட்டி), டி.ராம்மோகன் (சூரமங்கலம்), வருவாய் வட்டாட்சியா்கள் எஸ்.மாதேஸ்வரன் (சேலம் மேற்கு), கோபாலகிருஷ்ணன் (சேலம்) ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.