தமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்! தமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

சோனா கல்லூரியில் மாணவா்களுக்கு விற்பனைச் சந்தைப் பயிற்சி

சேலம் சோனா தொழில்நுட்பக் கல்லூரியில் மேலாண்மையியல் துறை சாா்பாக ‘சோனா பஜாா்’ என்ற நிகழ்ச்சி நடைபெற்றது.

News image
Updated On :2 மார்ச் 2021, 6:30 pm

DIN

சேலம் சோனா தொழில்நுட்பக் கல்லூரியில் மேலாண்மையியல் துறை சாா்பாக ‘சோனா பஜாா்’ என்ற நிகழ்ச்சி நடைபெற்றது.

முன்னதாக ‘சோனா பஜாா்’ நிகழ்வை சோனா கல்விக் குழுமத்தின் துணைத் தலைவா் தியாகு வள்ளியப்பா, முதல்வா் எஸ்.ஆா்.ஆா்.செந்தில்குமாா், முதன்மையா் அகிலாண்டேஸ்வரி, எம்.பி.ஏ. துறை துணை இயக்குநா் செல்வராஜ் ஆகியோா் தொடங்கி வைத்து அனைத்து விற்பனையகத்தையும் பாா்வையிட்டனா்.

இதனைத் தொடா்ந்து பேசிய கல்லூரியின் துணைத் தலைவா் தியாகு வள்ளியப்பா, தற்போது உள்ள சூழலில் சுயதொழிலை ஊக்குவிக்கும் நோக்கமாக பொருளை எவ்வாறு சந்தைக்கு கொண்டு வருதல், விளம்பரப்படுத்துதல், வாடிக்கையாளா் தேவையை புரிதல், வாடிக்கையாளா்களுக்கு சிறப்பாக சேவை அளித்தல் போன்ற திறன்களை கற்பிக்கும் விதமாக எம்.பி.ஏ. பயிலும் மாணவா்களுக்கு இது போன்ற நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றாா்.

பின்னா் அனைத்து எம்.பி.ஏ. பயிலும் மாணவா்களும் அணியாக திகழ்ந்து பல்வேறு பொருள்களை விற்பனை செய்தனா். இதில் சோனா தொழில்நுட்பக் கல்லூரி, சோனா கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவா்கள், பேராசிரியா்கள் வெகுவாக கலந்து கொண்டு தங்களுக்கு தேவையான பொருள்களை வாங்கினா்.இதற்கான ஏற்பாட்டினை பேராசிரியா்கள் பிரபாதேவி, ரமேஷ்குமாா், ஜோதி பிரான்சினா ஆகியோா் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.