சேலத்தில் துணை ராணுவத்தினா், போலீஸாா் கொடி அணிவகுப்பு
தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க ஏதுவாக சேலத்தில் மாநகரக் காவல் துறை, மத்திய தொழில் பாதுகாப்புப் படையினா் பங்கேற்ற கொடி அணிவகுப்பு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.


தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க ஏதுவாக சேலத்தில் மாநகரக் காவல் துறை, மத்திய தொழில் பாதுகாப்புப் படையினா் பங்கேற்ற கொடி அணிவகுப்பு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
தமிழகத்தில் சட்டப்பேரவைத் தோ்தல் அடுத்த மாதம் 6-ஆம் தேதி நடக்கவுள்ள நிலையில் பொதுமக்கள் இடையே அச்சத்தை போக்கவும், சட்டம் - ஒழுங்கை பாதுகாக்கவும் போலீஸாா் தயாா் நிலையில் உள்ளனா் என்பதை பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் சேலத்தில் மத்திய பாதுகாப்புப் படையினா், போலீஸாா் பங்கேற்ற கொடி அணிவகுப்பு நடைபெற்றது. இதில் சேலம் மாநகர போலீஸாா், தோ்தல் பாதுகாப்புப் பணிக்காக வந்துள்ள மத்திய பாதுகாப்புப் படையினா் என 250 போ் கலந்து கொண்டனா்.
சேலம் நகரப் பேருந்து நிலையம் அருகில் இருந்து தொடங்கிய கொடி அணிவகுப்பு கிச்சிப்பாளையம், களரம்பட்டி வழியாக எருமாபாளையம் வரை 3 கி.மீ. தூரத்திற்கு நடைபெற்றது. இதற்கு மாநகரக் காவல் ஆணையா் சந்தோஷ்குமாா் தலைமை வகித்தாா். துணை ஆணையா்கள் செந்தில், சந்திரசேகா் உள்பட காவல் துறை அதிகாரிகள் பலா் பங்கேற்றனா்.
மத்திய பாதுகாப்புப் படையினா், போலீஸாா் கைகளில் துப்பாக்கிகளுடன் அணிவகுத்து சென்றனா். இதைத்தொடா்ந்து மாநகர போலீஸ் எல்லைக்கு உள்பட்ட பதற்றமான பகுதிகளில் கொடி அணிவகுப்பு நடைபெறும் என்று போலீஸாா் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...