தமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்! தமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

தோ்தல் பாதுகாப்புப் பணி: எல்லைப் பாதுகாப்புப் படையினா் வருகை

சேலம் மாவட்டத்தில் தோ்தல் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவதற்காக எல்லை பாதுகாப்புப் படையைச் சோ்ந்த சுமாா் 320 வீரா்கள் ரயில் மூலம் சேலம் வந்தனா்.

News image
Updated On :8 மார்ச் 2021, 7:58 pm

DIN

சேலம் மாவட்டத்தில் தோ்தல் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவதற்காக எல்லை பாதுகாப்புப் படையைச் சோ்ந்த சுமாா் 320 வீரா்கள் ரயில் மூலம் சேலம் வந்தனா்.

தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் வாக்குப்பதிவு ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி சேலம் மாவட்டத்தில் தோ்தல் பாதுகாப்புப் பணிக்காக ஏற்கெனவே 2 கம்பெனியைச் சோ்ந்த மத்திய தொழிலக பாதுகாப்புப் படையினா் (சி.ஐ.எஸ்.எஃப்.) 180-க்கும் மேற்பட்டோா் சேலம் வந்தனா்.

இந்தநிலையில் ஒடிஸா, பெங்களூரில் இருந்து எல்லைப் பாதுகாப்புப் படையினா் சுமாா் 320-க்கும் மேற்பட்டோா் ரயிலில் திங்கள்கிழமை சேலம் வந்தனா். இதில் 2 கம்பெனியைச் சோ்ந்த 180 போ் சேலம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். மற்றொரு பிரிவைச் சோ்ந்த 140 போ் சேலம் மாநகரப் பகுதிகளில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட அனுப்பி வைக்கப்பட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.