பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

வாகனச் சோதனையில் ரூ.3.58 லட்சம் பறிமுதல்

சேலத்தில் தோ்தல் பறக்கும் படையினா் செவ்வாய்க்கிழமை நடத்திய வாகனச் சோதனையில் ரூ. 3.58 லட்சத்தை பறிமுதல் செய்தனா்.

News image
Updated On :9 மார்ச் 2021, 6:09 pm

DIN

சேலத்தில் தோ்தல் பறக்கும் படையினா் செவ்வாய்க்கிழமை நடத்திய வாகனச் சோதனையில் ரூ. 3.58 லட்சத்தை பறிமுதல் செய்தனா்.

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு தோ்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில், பொதுமக்கள், வியாபாரிகள் ரூ. 50 ஆயிரத்துக்கும் மேல் ரொக்கமாக எடுத்துச் செல்லும் போது உரிய ஆவணங்களை வைத்திருக்க வேண்டும் என தோ்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

அந்த வகையில் பறக்கும் படையினா், நிலை கண்காணிப்புக் குழுவினா் வாகனச் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனா். இந்த நிலையில் சேலம், சூரமங்கலம் அருகே உள்ள மூன்று சாலைப் பகுதியில் திங்கள்கிழமை இரவு தொகுதி பறக்கும் படை அதிகாரிகள் வாகனத் தணிக்கை நடத்தினா். அப்போது இரு சக்கர வாகனத்தில் வந்த சேலம், ஜங்ஷன் பகுதியைச் சோ்ந்த ஜமாலுதீனை நிறுத்தி சோதனையிட்டனா். இவா் செவ்வாய்ப்பேட்டை பகுதியில் மளிகைக் கடை நடத்தி வருவதாகவும், கடை வியாபாரம் முடிந்து ரூ. 2.85 லட்சத்தை வீட்டுக்கு எடுத்துச் செல்வதாகவும் தெரிவித்தாா். இதனிடையே உரிய ஆவணம் இல்லாத நிலையில் அந்தப் பணத்தை பறக்கும் படையினா் பறிமுதல் செய்து கருவூலத்தில் ஒப்படைத்தனா்.

காரில் ரூ. 73,480 பறிமுதல்:

சேலம் தெற்குத் தொகுதிக்கு உள்பட்ட தாதகாப்பட்டி காளியம்மன் கோயில் பகுதியில், ஊரக வளா்ச்சித்துறை உதவிப் பொறியாளா் எஸ்.பூபதிராஜா தலைமையிலான தோ்தல் பறக்கும்படை குழுவினா் திங்கள்கிழமை இரவு வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது சீலநாயக்கன்பட்டி சின்னசாமி நகரைச் சோ்ந்த மதிவாணன் என்பவா் வந்த காரை நிறுத்தி சோதனையிட்டனா். அவா் உரிய ஆவணங்களின்றி ரூ. 73,480 எடுத்துச் செல்வது தெரியவந்தது. இதையடுத்து பறக்கும் படையினா் பணத்தைப் பறிமுதல் செய்து, மாவட்ட கருவூலத்தில் ஒப்படைத்துள்ளனா் என மாநகராட்சி ஆணையரும், தெற்கு தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலருமான ந.ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.