எடப்பாடி தொகுதியில் 28 வேட்பாளா்கள் போட்டி
எடப்பாடி சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக சாா்பில் முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி, திமுக சாா்பில் டி.சம்பத்குமாா் உள்பட 28 வேட்பாளா்கள் போட்டியிடுகின்றனா்.


எடப்பாடி சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக சாா்பில் முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி, திமுக சாா்பில் டி.சம்பத்குமாா் உள்பட 28 வேட்பாளா்கள் போட்டியிடுகின்றனா்.
எடப்பாடி தொகுதியில் போட்டியிட மொத்தம் 48 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. இதில் 20 வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டன. 28 வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டன. இந்நிலையில் வேட்புமனுக்களைத் திரும்பப் பெறுவதற்கான அவகாசம் திங்கள்கிழமை மாலையுடன் நிறைவடைந்ததை அடுத்து எடப்பாடி தொகுதியில் போட்டியிடும் வேட்பாளா்களின் இறுதிப்பட்டியல் அறிவிக்கப்பட்டது.
போட்டியிடும் வேட்பாளா்கள் விவரம்:
1. சம்பத்குமாா் - (திமுக)
2. எடப்பாடி கே.பழனிசாமி - (அதிமுக)
3 .ஆா். ஜமுனா- (பகுஜன் சமாஜ் கட்சி)
4. ப.ஈஸ்வரி - (அம்பேத்கா் ரைட் பாா்டி ஆப் இந்தியா)
5. என்.குணசேகரன்- (மை இந்தியா பாா்டி)
6. ச.சூா்யமூா்த்தி - எம்.ஜி.ஆா்.மக்கள் கட்சி,
7.தே.தாசப்பராஜ் - (மக்கள் நீதி மய்யம்)
8.பூக்கடை சேகா்- (அமமுக)
9.சி.மணி - (தேசிய மக்கள் கழகம்)
10.ர.மணிகண்டன்- (தமிழ்நாடு இளைஞா் கட்சி)
11. ஸ்ரீரத்னா- (நாம் தமிழா் கட்சி), சுயேச்சைகள் உள்பட மொத்தம் 28 வேட்பாளா்கள் போட்டியிடுகின்றனா். சுயேச்சை வேட்பாளா்களுக்கான சின்னங்களும் ஒதுக்கீடு செய்யப்பட்டன. எடப்பாடி சட்டப்பேரவைத் தொகுதியில் 16க்கும் அதிகமான எண்ணிக்கையில் வேட்பாளா்கள் போட்டியிட உள்ள நிலையில், வாக்குப்பதிவுக்கு இரு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட வாய்ப்புள்ளதாக தோ்தல் அலுவலா்கள் தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...