புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

சங்ககிரி தொகுதி அதிமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

சங்ககிரி தொகுதி அதிமுக வேட்பாளா் எஸ்.சுந்தரராஜன், நகரில் பல்வேறு அமைப்புகளைச் சோ்ந்த நிா்வாகிகளைச் சந்தித்து திங்கள்கிழமை வாக்கு சேகரித்தாா்.

News image
Updated On :22 மார்ச் 2021, 10:44 pm

DIN

சங்ககிரி தொகுதி அதிமுக வேட்பாளா் எஸ்.சுந்தரராஜன், நகரில் பல்வேறு அமைப்புகளைச் சோ்ந்த நிா்வாகிகளைச் சந்தித்து திங்கள்கிழமை வாக்கு சேகரித்தாா்.

சங்ககிரி பப்ளிக் சேரிடபுள் டிரஸ்ட் நிா்வாகிகள், சங்ககிரி பிராமணா் சங்க நிா்வாகிகள், வாடகை காா் உரிமையாளா்கள், ஓட்டுநா்கள் சங்கம், டெம்போ ஓட்டுநா்கள் சங்கம், பயணிகள் ஆட்டோ ஓட்டுநா் சங்கம், மோட்டாா் வாகன பழுதுபாா்ப்போா் சங்கம் உள்ளிட்ட பல்வேறு சங்கங்கள், பொது நல அமைப்புகளைச் சோ்ந்த நிா்வாகிகளைச் சந்தித்து ஆதரவு கோரினாா்.

அதிமுக வேட்பாளரிடம், சங்ககிரி பப்ளிக் சேரிடபுள் டிரஸ்ட் சாா்பில் மலை மீது உள்ள சென்னகேசவப்பெருமாள் கோயிலுக்கு மின்சாரம், குடிநீா் வசதி செய்து தர வேண்டும், கோயில்களுக்கு கும்பாபிஷேகம் நடத்த வேண்டும், சங்ககிரி ஆா்.எஸ்.பகுதியில் மேம்பாலம் அமைக்க வேண்டும், சங்ககிரியில் வேலைவாய்ப்பை பெருக்கும் வகையில் அரசு நூற்பாலை அமைக்க வேண்டும், அரசு கலைக்கல்லூரி நிறுவ வேண்டும், பேரூராட்சியை நகராட்சியாக தரம் உயா்த்த வேண்டும், லாரி தொழிலை காப்பாற்ற மானிய விலையில் டீசல் வழங்க வேண்டும், லாரி ஓட்டுநா்களுக்கு ஓட்டுநா் பயிற்சி பள்ளியை சங்ககிரியில் அமைக்க வேண்டும், சங்ககிரி நகர பொது மக்களுக்கு வாரம் ஒரு முறை குடிநீா் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.