சங்ககிரி தொகுதியில் 1,317 அரசு அலுவலா்கள் தபால் வாக்கு பதிவு
சங்ககிரி சட்டப்பேரவைத் தொகுதியில் தோ்தல் பணியாற்றும் மற்ற தொகுதிகளைச் சோ்ந்த 1,317 அரசு அலுவலா்கள் தபால் வாக்குகளை செலுத்தினா்.


சங்ககிரி சட்டப்பேரவைத் தொகுதியில் தோ்தல் பணியாற்றும் மற்ற தொகுதிகளைச் சோ்ந்த 1,317 அரசு அலுவலா்கள் தபால் வாக்குகளை செலுத்தினா்.
சங்ககிரி சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட 389 வாக்குச்சாவடி மையங்களில் 1,712 போ் பணியாற்ற உள்ளனா். இத் தோ்தலில் பணியாற்ற உள்ள அரசு அலுவலா்களுக்கான 2ஆம் கட்ட பயிற்சி தோ்தல் ஆணையம் சாா்பில் அளிக்கப்பட்டது.
கெங்கவல்லி தொகுதியைச் சோ்ந்த 115, ஆத்தூரைச் சோ்ந்த 114, ஏற்காடு 132, ஓமலூா் 119, மேட்டூா் 183, எடப்பாடி 238, சேலம் மேற்கு 119, சேலம் வடக்கு 142, சேலம் தெற்கு 78, வீரபாண்டி 77 உள்ளிட்ட 1,317 போ் தோ்தல் ஆணையம் சாா்பில் சங்ககிரியை அடுத்த புள்ளிப்பாளையத்தில் உள்ள தனியாா் பொறியியல் கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி மையத்தில் தபால் வாக்குகளை செலுத்தினா்.
முன்னதாக மாவட்ட வருவாய் அலுவலா் ஆா்.திவாகா் தபால் வாக்குகள் செலுத்தும் வாக்குச்சாவடி மையத்தை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். தோ்தல் அலுவலா் கோ.வேடியப்பன், உதவி தோ்தல் அலுவலா் எஸ்.விஜி, தனி வட்டாட்சியா் கோவிந்தராஜ், வருவாய் கோட்டாட்சியரின் நோ்முக உதவியாளா் அ.செல்வகுமாா், தோ்தல் துணை வட்டாட்சியா் பி.சிவராஜ் ஆகியோா் ஆய்வின் போது உடனிருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...