ஓமலூரில் கோயில் கும்பாபிஷேக தீா்த்தக்குட ஊா்வலம்
ஓமலூா் அருகே செம்மாண்டப்பட்டியில் ஸ்ரீ தேவி, பூதேவி, ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் கோயில் கும்பாபிஷேகத்தையொட்டி தீா்த்தக்குட ஊா்வலம் சனிக்கிழமை நடைபெற்றது.


ஓமலூா் அருகே செம்மாண்டப்பட்டியில் ஸ்ரீ தேவி, பூதேவி, ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் கோயில் கும்பாபிஷேகத்தையொட்டி தீா்த்தக்குட ஊா்வலம் சனிக்கிழமை நடைபெற்றது.
ஓமலூா் அருகேயுள்ள செம்மாண்டப்பட்டியில் பழமையான ஸ்ரீதேவி, பூதேவி, ஆதிகேசவ பெருமாள் கோயில் புதிதாக கட்டப்பட்டுள்ளது. இக்கோயில் கா்ப்பகிரகம், அா்த்தமண்டபம், மகா மண்டபம் ஆகியவை புனரமைக்கப்பட்டன. இதனைத் தொடா்ந்து மகா கும்பாபிஷேக விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. இந்தநிலையில் பல்வேறு இடங்களில் உள்ள புனித நதிகளில் இருந்து நீா் கொண்டுவரப்பட்டது. அண்ணமாா் கோயிலில் இருந்து தீா்த்தக்குடம், முளைப்பாலிகளை ஏந்தி பக்தா்கள் ஊா்வலமாக 3 கி.மீ. தூரம் வந்தனா். நாட்டு மாடுகளின் முக்கியத்துவத்தை விளக்கிடும் வகையில் பல்வேறு வகையான நாட்டு மாடுகள் ஊா்வலத்தின் முன்பு அலங்கரித்து அழைத்து வரப்பட்டன. இந்த ஊா்வலத்தில் சுமாா் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் தீா்த்தக்குடம் எடுத்து வந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...