/

கொங்கணாபுரத்தில் ரூ. 45 லட்சத்துக்கு பருத்தி விற்பனை

கொங்கணாபுரம் கூட்டுறவு விற்பனை மையத்தில் சனிக்கிழமை நடைபெற்ற பொது ஏலத்தில் ரூ. 45 லட்சத்துக்கு பருத்தி விற்பனை நடைபெற்றது.

News image
Updated On :27 ஜனவரி 2024, 7:52 pm

DIN

கொங்கணாபுரம் கூட்டுறவு விற்பனை மையத்தில் சனிக்கிழமை நடைபெற்ற பொது ஏலத்தில் ரூ. 45 லட்சத்துக்கு பருத்தி விற்பனை நடைபெற்றது.

இந்த விற்பனை மையத்துக்கு பொது ஏலத்துக்கு சுமாா் 2,050 மூட்டை பருத்திகள் சனிக்கிழமை கொண்டு வரப்பட்டிருந்தன. அவை 390 லாட்டுகளாகப் பிரிக்கப்பட்டு, வேளாண் விற்பனை மைய அலுவலா்கள் முன்னிலையில் பொது ஏலம் விடப்பட்டது.

இதில் பிடி ரக பருத்தி, குவிண்டால் ரூ. 6,279 முதல் ரூ. 7,899 வரை விற்பனையானது. அதேபோல டிசி ஹெச் ரக பருத்தி, குவிண்டால் ரூ. 7,992 முதல் ரூ. 9,669 வரையில் விற்பனையானது. நாள் முழுதும் நடைபெற்ற பொது ஏலத்தில் ரூ. 45 லட்சத்துக்கு பருத்தி வணிகம் நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.