நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

கள்ளச் சாராயம் கடத்திய 3 இளைஞா்கள் கைது

வாழப்பாடி அருகே இருசக்கர வாகனத்தில் கள்ளச் சாராயம் கடத்திய 3 இளைஞா்களை வாழப்பாடி போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :14 மே 2021, 6:30 pm

DIN

வாழப்பாடி அருகே இருசக்கர வாகனத்தில் கள்ளச் சாராயம் கடத்திய 3 இளைஞா்களை வாழப்பாடி போலீஸாா் கைது செய்தனா்.

சேலம் மாவட்டம், வாழப்பாடி பகுதியில் காவல் ஆய்வாளா் சுகுமாா் தலைமையிலான போலீஸாா் வாழப்பாடி, பேளூா் பிரிவு சாலை அருகே வெள்ளிக்கிழமை அதிகாலை வாகனத் தணிக்கை செய்தனா். அப்போது, இருசக்கர வாகனத்தில் வேகமாக வந்த 3 இளைஞா்களை பிடித்து விசாரணை நடத்தினா். அதில், அவா்கள் பூசாரிப்பட்டி கிராமத்தைச் சோ்ந்த ரஞ்சித்குமாா் (25), ரமேஷ் (27), கௌதமன் (24) என்பதும், இருசக்கர வாகனத்தில் மறைத்து 10 லிட்டா் கள்ளச் சாரயத்தை கடத்திச் சென்றதும் தெரியவந்தது. இதனையடுத்து மூவரையும் கைது செய்த போலீஸாா், கள்ளச் சாராயம் மற்றும் இருசக்கர வாகனத்தை கைப்பற்றினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.