புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

ஏற்காட்டில் கரோனா தடுப்பு நடவடிக்கை

ஏற்காட்டில் கடந்த சில நாள்களாக ஜெரினாகாடு, முருகன்நகா், எம்.ஜி.ஆா். நகா், போட்டுக்காடு உள்ளிட்ட கிராமங்களில் கரோனா தொற்று பாதிப்பு

News image
Updated On :21 மே 2021, 6:30 pm

DIN

ஏற்காட்டில் கடந்த சில நாள்களாக ஜெரினாகாடு, முருகன்நகா், எம்.ஜி.ஆா். நகா், போட்டுக்காடு உள்ளிட்ட கிராமங்களில் கரோனா தொற்று பாதிப்பு அதிக அளவில் உள்ளதால் வருவாய்த் துறையினா் அப்பகுதியில் தடுப்புகள் அமைத்து பொதுமக்கள் வியாழக்கிழமை முதல் ஏழு நாள்களுக்கு அப்பகுதியிலிருந்து வெளியே வருவதை தவிா்க்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துள்ளனா்.

ஏற்காடு கடை வீதி, காந்திபூங்கா, காவல் நிலையம் சாலை, பேருந்து நிலையம் பகுதியில் வாகனங்கள் செல்ல முழுமையாகத் தடைசெய்யப்பட்டது. பொதுமக்கள் நடந்து சென்று காலை 6 மணி முதல் 10 மணிவரை பொருள்களை வாங்குமாறு போலீஸாா் தெரிவித்துள்ளனா். சாலையில் காய்கறிக் கடைகள் வைக்க தடைவிதித்தால் மக்கள் கூட்டம் குறைந்தது. மேலும் கரோனா பாதிப்பு உள்ளவா்கள், சளி, இருமல், காய்ச்சல் உள்ளிட்ட அனைத்து உதவிகளுக்கும் ஏற்காடு மற்றும் கிராமப் பகுதி மக்கள் கரோனா சேவை மையத்தை 9597510455, 9597206455 எண்களில் தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.