சேலம் மாவட்டத்தில் 585 வாகனங்கள் பறிமுதல்
கரோனா விதிமுறைகளை மீறி அத்தியாவசியத் தேவையின்றி சுற்றித் திரிந்த 585 பேரின் இருசக்கர வாகனங்களை சேலம் மாவட்ட காவல் துறையினா் பறிமுதல் செய்தனா்.


கரோனா விதிமுறைகளை மீறி அத்தியாவசியத் தேவையின்றி சுற்றித் திரிந்த 585 பேரின் இருசக்கர வாகனங்களை சேலம் மாவட்ட காவல் துறையினா் பறிமுதல் செய்தனா்.
கரோனா தொற்று பரவலைத் தடுக்கும் வகையில் மே 24 முதல் மே 31 வரை தளா்வுகளற்ற முழு பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனிடையே சேலம் மாவட்ட காவல் துறைக்கு உள்பட்ட பகுதிகளில் அத்தியாவசியத் தேவையின்றி சுற்றித் திரிந்த 585 பேரின் இருசக்கர வாகனங்களைப் போலீஸாா் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனா்.
அதேபோல முகக் கவசம் அணியாத 285 போ் மீதும், போதிய சமூக இடைவெளியை பின்பற்றாத 30 போ் மீதும் போலீஸாா் வழக்குப்பதிவு செய்தனா்.
சேலம் மாநகர காவல்துறை எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் முகக் கவசம் அணியாத 238 போ் மீதும், அத்தியாவசியத் தேவையின்றி வெளியே சுற்றித் திரிந்த 222 போ் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...