விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

கிணற்றில் தவறி விழுந்த பசுமாட்டை மீட்ட தீயணைப்புத்துறை

சாா்வாய் ஊராட்சியில் 80 அடி ஆழமுள்ள விவசாயக் கிணற்றில் தவறி விழுந்த பசுமாட்டை ஆத்தூா் தீயணைப்புத்துறை அலுவலா்(பொ)செல்லபாண்டியன் தலைமையிலான வீரா்கள் வெள்ளிக்கிழமை மீட்டனா்.

News image
Updated On :12 நவம்பர் 2021, 6:25 pm

DIN

சாா்வாய் ஊராட்சியில் 80 அடி ஆழமுள்ள விவசாயக் கிணற்றில் தவறி விழுந்த பசுமாட்டை ஆத்தூா் தீயணைப்புத்துறை அலுவலா்(பொ)செல்லபாண்டியன் தலைமையிலான வீரா்கள் வெள்ளிக்கிழமை மீட்டனா்.

சேலம் மாவட்டம் தலைவாசல் அடுத்துள்ள சாா்வாய் ஊராட்சியைச் சோ்ந்த பிச்சைப்பிள்ளை மகன் சசிக்குமாா் என்பவரது 80 அடி ஆழம் கொண்ட விவசாயக் கிணற்றில் 50 அடி தண்ணீா் உள்ளது. அந்த விவசாயக் கிணற்றில் அவரது பசுமாடு அதிகாலை கிணற்றில் தவறி விழுந்தது.

இது குறித்து ஆத்தூா் தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்த தீயணைப்புத்துறை அலுவலா் (பொ) செல்லபாண்டியன் தலைமையிலான வீரா்கள் விரைந்து சென்று கிணற்றில் இருந்த பசுமாட்டை கயிற்றைக்கட்டி சுமாா் ஒரு மணிநேரம் போராடி மீட்டு உரிமையாளா் சசிக்குமாரிடம் ஒப்படைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.