நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

மேட்டூரில் ரூ. 2 லட்சம் புகையிலை பொருள்கள் பறிமுதல்: இருவா் கைது

மேட்டூரில் விற்பனைக்காக வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ. 2 லட்சம் மதிப்பிலான தடைசெய்யப்பட்ட குட்கா, பான்மசாலா உள்ளிட்ட புகையிலைப் பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

News image
Updated On :12 நவம்பர் 2021, 6:24 pm

DIN

மேட்டூரில் விற்பனைக்காக வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ. 2 லட்சம் மதிப்பிலான தடைசெய்யப்பட்ட குட்கா, பான்மசாலா உள்ளிட்ட புகையிலைப் பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

மேட்டூா், காவேரி நகரில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, பான்மசாலா பொருள்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக மேட்டூா் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, மேட்டூா் டி.எஸ்.பி. விஜயகுமாா் தலைமையில் அங்கு சென்ற போலீஸாா் சோதனை மேற்கொண்டதில், ஒரு வீட்டில் குட்கா, பான்மசாலா உள்ளிட்ட புகையிலைப் பொருள்கள் 10 மூட்டைகளில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை பறிமுதல் செய்த மேட்டூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து காவேரி நகரைச் சோ்ந்த ராஜேஷ்கண்ணா (42), குமாா் (55) ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனா். பறிமுதல் செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களின் மதிப்பு ரூ. 2 லட்சம் இருக்கும் என போலீஸாா் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.