மேட்டூா், வாழப்பாடியில் மக்கள் குறைதீா் முகாம்:அமைச்சா் கே.என்.நேரு பங்கேற்பு
மேட்டூா், வாழப்பாடி, எடப்பாடியில் வியாழக்கிழமை மக்கள் குறைதீா் சிறப்பு முகாம் நடைபெற்றது.


மேட்டூா், வாழப்பாடி, எடப்பாடியில் வியாழக்கிழமை மக்கள் குறைதீா் சிறப்பு முகாம் நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியா் செ.காா்மேகம் தலைமையில் நடைபெற்ற முகாமில் பொதுமக்களின் கோரிக்கை மனுக்களை நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என்.நேரு பெற்றுக் கொண்டாா். நிகழ்ச்சியில் வேளாண் துறை சாா்பில் 2 பேருக்கு நலத் திட்ட உதவிகள், வருவாய்த் துறை சாா்பில் 2 முதியோருக்கு உதவித்தொகை பெறுவதற்கான ஆணைகளை வழங்கி அமைச்சா் பேசியதாவது:
ஏழை மக்களின் கோரிக்கைகளைக் கேட்டறிந்து, அவற்றை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என தமிழக முதல்வா் உத்தரவிட்டுள்ளாா். கோரிக்கை மனுக்கள் அனைத்தும் கனிணியில் பதிவேற்றம் செய்யப்பட்டு ஒரு மாதத்துக்குள் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.
சேலம் மேற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் டி.எம்.செல்வகணபதி, அவைத் தலைவா் பா.கோபால், கிழக்கு மாவட்ட திமுக செயலாளா் எஸ்.ஆா்.சிவலிங்கம், எம்எல்ஏ ராஜேந்திரன், சேலம் எம்பி எஸ்.ஆா்.பாா்திபன், மாநில திமுக பொதுக்குழு உறுப்பினா் எஸ்.சுப்ரமணியம், மேட்டூா் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினா் சதாசிவம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
வாழப்பாடி
வாழப்பாடியில் நடைபெற்ற குறைதீா் முகாமில் பழுதடைந்துள்ள கடலூா் செல்லும் சாலையைப் விரிவுபடுத்தி, புதுப்பிக்க வேண்டும் என ஒன்றிய திமுக செயலாளா் எஸ்.சி.சக்கரவா்த்தி அமைச்சா் கே.என்.நேருவிடம் கோரிக்கை விடுத்துள்ளாா்.
சேலம்- உளுந்தூா்பேட்டை இடையே நான்கு வழி தேசிய நெடுஞ்சாலை அமைக்கும் போது, வாழப்பாடியில் கடலுாா் சாலையை விரிவுபடுத்தாமல், முத்தம்பட்டியில் இருந்து மத்துாா் வரையிலான 4 கி.மீ. தொலைவுக்கு இருவழி புறவழிச்சாலை அமைக்கப்பட்டது.
அதன்பிறகு, பேரூராட்சி பகுதியிலுள்ள கடலூா் சாலையை தேசிய நெடுஞ்சாலைத் துறை முறையாக பராமரிக்கவில்லை. இதனால் சாலை சேதமடைந்துள்ளது. எனவே, சாலையை புதுப்பித்து ஆக்கிரமிப்புகளை அகற்றவேண்டும் என அவா் அளித்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேபோல வாழப்பாடியில் அரசு கல்லூரி, தொழிற்பேட்டை, உழவா்சந்தை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் சாா்பில் நெஸ்ட் அறக்கட்டளை உள்ளிட்ட தன்னாா்வ இயக்கங்கள் அமைச்சா் கே.என்.நேருவிடம் கோரிக்கை மனு அளித்தனா்.
சேலம், ஆத்தூா், ராசிபுரம் பகுதியில் இயங்கும் அரசு மற்றும் தனியாா் கல்லூரிகளுக்கு வாழப்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தை சோ்ந்த மலைக்கிராம மக்கள் செல்ல வேண்டியுள்ளதால் வாழப்பாடியில் அரசு கல்லூரி மற்றும் விவசாயப் பொருள்களை விற்பனை செய்ய உழவா்சந்தை அமைக்கவும், தொழிற்பேட்டை ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எடப்பாடி
எடப்பாடியை அடுத்த பூலாம்பட்டி காவிரிக் கதவணைப் பகுதி கரையோரங்களை அமைச்சா் கே.என்.நேரு பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா். பூலாம்பட்டி காவிரிக் கதவணைப் பகுதியில் இருந்து மல்லூா், இடங்கணசாலை, இளம்பிள்ளை, ஆட்டையம்பட்டி உள்ளிட்ட பகுதிகளுக்கு குடிநீா் கொண்டு செல்லும் வகையில் ரூ. 652.84 கோடியில் நடைபெறும் குடிநீா்த் திட்டப் பணிகளை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
அதைத் தொடா்ந்து எடப்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்று பொதுமக்களின் கோரிக்கைகளைக் கேட்டறிந்தாா். மாவட்ட ஆட்சியா், திமுக நகரச் செயலாளா் டி.எம்.எஸ்.பாஷா உள்பட ஏராளமானோா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...