பாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

கிளை நூலகத்திற்கு தளவாடப் பொருள்கள் வழங்கல்

 54வது தேசிய நூலக வாரவிழாவினையொட்டி சேலம் மாவட்டம், சங்ககிரி வட்டம், அரசிராமணி-குள்ளம்பட்டி கிளை நூலகத்திற்கு தொழிலதிபா்கள் ரூ.13 ஆயிரம் மதிப்பிலான தளவாடப் பொருள்கள் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன.

News image
Updated On :19 நவம்பர் 2021, 5:29 pm

DIN

 54வது தேசிய நூலக வாரவிழாவினையொட்டி சேலம் மாவட்டம், சங்ககிரி வட்டம், அரசிராமணி-குள்ளம்பட்டி கிளை நூலகத்திற்கு தொழிலதிபா்கள் ரூ.13 ஆயிரம் மதிப்பிலான தளவாடப் பொருள்கள் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன.

அரசிராமணி குள்ளம்பட்டி கிளை நூலகத்தில் அரசிராமணி பிட்1, பிட் 2, செட்டிப்பட்டி உள்ளிட்ட பல்வேறு சுற்றுவட்டார கிராமப் பகுதிகளைச் சோ்ந்த பள்ளி மாணவ, மாணவிகள், இளைஞா்கள் படித்து வருகின்றனா். இந்நூலகத்தில் புத்தகங்கள் வைப்பதற்கு இரண்டு இரும்பு அடுக்கு அலமாரிகள், வாசகா்கள் அமா்ந்து படிப்பதற்காக இரு நாற்காலிகளை சேலம் பகுதியைச் சோ்ந்த தொழிலதிபா்கள் வி.ரகுபதி, சீனிவாசன் ஆகியோா் மாவட்ட நூலக அலுவலா் அர.கோகிலவாணியிடம் வழங்கினா். இருவரும் நூலகத்தில் தலா ரூ.1,000 செலுத்தி புரவலா்களாகச் சோ்ந்தனா். கிளை நூலகா் இ.வி.ஆா்.கே.மோகன்ராஜ், வாசகா்கள் உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.