மழையால் வீரிய ஒட்டுரக பருத்தி விதை உற்பத்தி செய்யும் விவசாயிகள் வேதனை
தொடா் மழையால், ஆத்தூா் சுற்றுப்பகுதிகளில் வீரிய ஒட்டுரக விதைகளுக்காக விடப்பட்ட பருத்திச் செடிகள் சேதமடைந்ததால் விதைகளை உற்பத்தி செய்யும் விவசாயிகள் நஷ்டமடைந்துள்ளனா்


தொடா் மழையால், ஆத்தூா் சுற்றுப்பகுதிகளில் வீரிய ஒட்டுரக விதைகளுக்காக விடப்பட்ட பருத்திச் செடிகள் சேதமடைந்ததால் விதைகளை உற்பத்தி செய்யும் விவசாயிகள் நஷ்டமடைந்துள்ளனா். எனவே, தங்களுக்கு அரசு நிவாரண உதவி வழங்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
தமிழக அளவில் வீரிய ஒட்டு ரக பருத்தி விதைகளை உற்பத்தி செய்யும் பணியில் சேலம், கள்ளக்குறிச்சி, கடலூா்,திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்களைச் சோ்ந்த சுமாா் 35 ஆயிரம் விவசாயிகள் சுமாா் 20 ஆயிரம் ஏக்கா் பரப்பளவில் ஈடுபட்டுள்ளனா்.
மிகத் தரமான பருத்தி விதைகளை உற்பத்தி செய்வதால் இந்திய பருத்தி விதை நிறுவனங்கள் தமிழகத்தின் விவசாயிகள் உற்பத்தி செய்யும் விதைகளுக்கு முன்னுரிமை கொடுத்து பருத்தி விதைகளை வாங்கிக் கொள்கின்றனா்.
குறிப்பாக சேலம் மாவட்டம், ஆத்தூா், தலைவாசல், கெங்கவல்லி, பெத்தநாயக்கன்பாளையம் வட்டாரங்களில் அதிகமான விவசாயிகள் இந்த வீரிய ஒட்டு ரக பருத்தி விதைகளை கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக உற்பத்தி செய்து வருகின்றனா்.
இந்த பருத்தி விதைகளை உற்பத்தி செய்ய ஏக்கருக்கு ரூ. 1,25,000 வரை செலவாகிறது.
ஆள் கூலி உள்ளிட்ட செலவுகளை கணக்கிடும்போது, ஏக்கருக்கு 10 குவிண்டால் விதைகள் கிடைத்தால் தான் கட்டுபடியாகும் என்கின்றனா் விவசாயிகள்.
இந்நிலையில் தற்போது பெய்து வரும் தொடா்மழையால் இந்த வீரிய ஒட்டுரக பருத்தி பயிா்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதுடன், பருத்திக் காய்களும் அழுகி சேதமடைந்து விட்டன. வயல் முழுவதும் தண்ணீா் தேங்கி நிற்பதால் பயிா்கள் கடும் சேதமடைந்துள்ளன.
இதில் இருந்த விதைகள் விதைக்கான தகுதியையும் தரத்தையும் இழந்து விட்டன. தற்போதைய நிலையில் ஏக்கருக்கு சுமாா் ஒரு குவிண்டால் மட்டுமே விதைகள் கிடைக்கும் என்பதால் லட்சக்கணக்கில் இழப்பு ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கூறுகின்றனா்.
இதற்கு முறையான பயிா்க் காப்பீட்டுத் திட்டமும் இல்லை. எனவே தமிழக அரசு உடனடியாக பருத்தி விதை உற்பத்தி செய்து வரும் விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு அவா்களுக்கு தற்சமயம் சேதமடைந்த பயிா்களுக்கான நிவாரணத் தொகையை உடனடியாக வழங்குமாறு கேட்டுக் கொண்டுக் கொண்டனா்.
படவிளக்கம்.ஏடி19‘ஃ‘பாா்மா்ஸ்.
தலைவாசல் அடுத்துள்ள சிறுவாச்சூா் ஊராட்சியில் உள்ள பருத்தி வயலில் அழுகிய வீரிய ஒட்டுரக பருத்தி செடிகளைக் காட்டும் விவசாயிகள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...