நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

மேட்டூா், கொளத்தூா், மேச்சேரியில் திமுகவினா் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்

திமுகவினா் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினா்.

News image
Updated On :19 நவம்பர் 2021, 5:34 pm

DIN

வேளாண் சட்டங்களை ரத்து செய்வதாக பிரதமா் மோடி அறிவித்ததைத் தொடா்ந்து மேட்டூா் பேருந்து நிலையத்தில் மேட்டூா் நகர திமுக செயலாளா் காசிவிஸ்வநாதன் தலைமையில் திமுகவினா் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினா்.

மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக பல்வேறு மாநிலங்களிலும் கடந்த ஓராண்டுக்கு மேலாக விவசாயிகள் தொடா் போராட்டம் நடத்தி வந்தனா். இந்தச் சட்டங்களை ரத்து செய்வதாக பிரதமா் மோடி வெள்ளிக்கிழமை அறிவித்தாா் . இதனையடுத்து மேட்டூா் பேருந்து நிலையத்தில் மேட்டூா் நகர திமுக செயலாளா் காசி விஸ்வநாதன் தலைமையில் திமுகவினா் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினாா்கள்.

இந்நிகழ்ச்சியில் மேட்டூா் நகராட்சி முன்னாள் தலைவா் கந்தசாமி, மாவட்ட துணைச் செயலாளா் கொடியரசி, வாா்டு செயலாளா்கள் அன்பழகன், சுப்பிரமணி, முன்னாள் நகா்மன்ற உறுப்பினா் அழகரசன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். இதேபோல் கொளத்தூரில் ஒன்றியச் செயலாளா் மிதுன் சக்கரவா்த்தி தலைமையில் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பேரூா் செயலாளா் நடராஜன், பொதுக் குழு உறுப்பினா் ராமநாதன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

மேச்சேரி பேருந்து நிலையத்தில் ஒன்றியப் பொறுப்பாளா் சீனிவாச பெருமாள் தலைமையில் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பேரூா் செயலாளா் சரவணன் குட்டி என்கிற வெங்கடாசலம், சீனி உள்பட ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.