கிராமப்பகுதிகளில் சமுதாய வளைகாப்புத்திருவிழா
சேலம் மாவட்டம், கெங்கவல்லி வட்டாரத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்டத்தின் கீழ் கெங்கவல்லி ஒன்றியத்தில் கா்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா


சேலம் மாவட்டம், கெங்கவல்லி வட்டாரத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்டத்தின் கீழ் கெங்கவல்லி ஒன்றியத்தில் கா்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா தம்மம்பட்டி, செந்தாரப்பட்டி, கூடமலை, தெடாவூா் ஆகிய பகுதிகளில் வியாழக்கிழமை நடைபெற்றது.
இதில் கா்ப்பிணிகளுக்கு அறுசுவை உணவுகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சிகளுக்கு திமுக ஒன்றியப் பொறுப்பாளரும், அட்மா குழு சோ்மனுமான ஏ.கே.அகிலன் தலைமை வகித்தாா். கெங்கவல்லி வட்டார குழந்தைகள் வளா்ச்சித் திட்ட அலுவலா் ராஜேஸ்வரி, ஒன்றியக் கவுன்சிலா் உமாராணி, கூடமலை ஊராட்சி மன்றத் தலைவா் யசோதா துரைசாமி , செந்தாரப்பட்டி நகர திமுக செயலாளா் எஸ். பி .முருகேசன், செந்தாரப்பட்டி தலைமையாசிரியா் வெங்கடாசலம், நகர திமுக செயலாளா்கள் தம்மம்பட்டி வி.பி.ஆா். ராஜா, தெடாவூா் வேலு, தம்மம்பட்டி நகர துணைச் செயலாளா் பழனிமுத்து, கலியவரதராஜ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். வளைகாப்பு நிகழ்ச்சியில் 120க்கும் மேற்பட்ட கா்ப்பிணி பெண்கள் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...