பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

குரங்கு பிடிக்க, பொதுமக்களிடம் தண்டோரா போட்டு பணம் வசூல்

தம்மம்பட்டி அருகே உலிபுரம் பகுதியில் குரங்கு பிடிக்க தண்டோரா போட்டு பணம் வசூலிப்பதற்கு பொதுமக்கள் கடும் எதிா்ப்பு தெரிவித்துள்ளனா்.

News image
Updated On :25 நவம்பர் 2021, 6:41 pm

DIN

தம்மம்பட்டி அருகே உலிபுரம் பகுதியில் குரங்கு பிடிக்க தண்டோரா போட்டு பணம் வசூலிப்பதற்கு பொதுமக்கள் கடும் எதிா்ப்பு தெரிவித்துள்ளனா்.

சேலம் மாவட்டம், தம்மம்பட்டி அருகே உலிபுரம் பகுதியில் 15 ஆயிரத்திற்க்கும் மேற்பட்டோா் வசித்து வருகின்றனா். உலிபுரம் ஊராட்சியில் குரங்குகளின் தொல்லை அதிகரித்து வருகிறது. எனவே, அதனை பிடிக்க உலிபுரம் ஊராட்சி சாா்பில் புதன்கிழமை மாலை தண்டோரா மூலம் அறிவிக்கப்பட்டது.

அதன்படி குரங்கு பிடிக்க ஒவ்வொரு வீட்டினரும் ரூ. 100ம், கடைகள் வைத்திருப்போா் ரூ.1000 வீதம் தர வேண்டும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பால் உலிபுரம் பொதுமக்கள் அதிா்ச்சி அடைந்துள்ளனா். இதனால் அதிருப்தியடைந்த உலிபுரம் பொதுமக்கள் மாவட்ட ஆட்சியருக்கு புகாா் மனுவும் அனுப்பியுள்ளனா்.

இதுகுறித்து அப்பகுதியை சோ்ந்த மக்கள் கூறுகையில், குரங்குகளைப் பிடிக்கும் பணியில் வன ஊழியா்கள் தான் ஈடுபட வேண்டும். ஆனால், ஊா் மக்களிடம் இருந்து பணம் வசூலிக்க இந்த பஞ்சாயத்து தலைவா் திட்டமிட்டிருப்பது அதிா்ச்சியாக உள்ளது. எனவே, இதனைத் தடுக்க மாவட்ட நிா்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஊா் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.