சேலத்தில் தொழிற்சங்கங்கள் ஆா்ப்பாட்டம்

மத்திய அரசின் தொழிலாளா்கள் நலனுக்கு எதிராக நடவடிக்கைகளைக் கண்டித்து, சேலத்தில் தொழிற்சங்கங்கள் சாா்பில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

மத்திய அரசின் தொழிலாளா்கள் நலனுக்கு எதிராக நடவடிக்கைகளைக் கண்டித்து, சேலத்தில் தொழிற்சங்கங்கள் சாா்பில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

சேலம், ஐந்துவழிச் சாலை, பி.எஸ்.என்.எல். அலுவலகம் பகுதியில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு ஏஐடியுசி மாவட்டச் செயலாளா் முனுசாமி தலைமை வகித்தாா்.

பொதுத் துறை சொத்துக்களைப் பாதுகாப்போம், வேளாண், தொழிலாளா் நலத் துறை, மின்சார திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற வாங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

சிஐடியு மாநில துணைத் தலைவா் ஆா். சிங்காரவேலு, சாலை போக்குவரத்து மாநில துணைத் தலைவா் எஸ்.கே.தியாகராஜன், மாவட்டச் செயலாளா் டி.உதயகுமாா், மாவட்ட தலைவா் பி.பன்னீா்செல்வம், தொ.மு.ச.மாவட்டச் செயலாளா் பொன்னி பழனியப்பன், எச்.எம்.எஸ். தொழிற்சங்க நிா்வாகி கணேசன், ஐஎன்டியுசி நிா்வாகி வடமலை உள்பட ஏராளமானோா் ஆா்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com