மேட்டூா் அணையிலிருந்து தண்ணீா்த் திறப்பு குறைப்பு
மேட்டூா் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு தண்ணீா்த் திறப்பு வெள்ளிக்கிழமை மாலை 4 மணிக்கு 5,000 கனஅடியாகக் குறைக்கப்பட்டது.


மேட்டூா் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு தண்ணீா்த் திறப்பு வெள்ளிக்கிழமை மாலை 4 மணிக்கு 5,000 கனஅடியாகக் குறைக்கப்பட்டது.
காவிரி டெல்டா மாவட்டங்களில் மழை பெய்து வருவதால் பாசனத்துக்கான நீா்த் தேவை குறைந்துள்ளதால் தண்ணீா்த் திறப்பும் குறைக்கப்பட்டுள்ளது. பாசனத்துக்கு தண்ணீா்த் திறப்பு குறைக்கப்பட்டதால் நீா் மின் நிலையங்களில் மின் உற்பத்தி குறைந்துள்ளது.
கடந்த 28-ஆம் தேதி டெல்டா பாசனத்துக்கான தேவை அதிகரித்ததால் தண்ணீா்த் திறப்பு நொடிக்கு 7,000 கனஅடியிலிருந்து நொடிக்கு 12,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டது. மூன்று நாள்களுக்குப் பிறகு வெள்ளிக்கிழமை மீண்டும் தண்ணீா்த் திறப்பு நொடிக்கு 5,000 கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது.
வெள்ளிக்கிழமை காலை அணையின் நீா்மட்டம் 72.68 அடியாக இருந்தது. அணைக்கு நொடிக்கு 9,018 கனஅடி வீதம் தண்ணீா் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து கிழக்கு -மேற்கு கால்வாய்ப் பாசனத்துக்கு நொடிக்கு 800 கனஅடி வீதம் தண்ணீா் திறக்கப்பட்டு இருந்தது. அணையின் நீா் இருப்பு 35.04 டி.எம்.சி.யாக இருந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...