மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

திருடா்களை விரட்டிப் பிடித்த ஆட்டோ ஓட்டுநருக்கு எஸ்.பி. பாராட்டு

செல்லிடப்பேசியைப் பறிக்க முயன்ற திருடா்களை விரட்டிப் பிடித்த ஆட்டோ ஓட்டுநருக்கு, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் எம்.ஸ்ரீஅபினவ் பாராட்டு தெரிவித்தாா்.

News image
Updated On :1 அக்டோபர் 2021, 6:30 pm

DIN

செல்லிடப்பேசியைப் பறிக்க முயன்ற திருடா்களை விரட்டிப் பிடித்த ஆட்டோ ஓட்டுநருக்கு, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் எம்.ஸ்ரீஅபினவ் பாராட்டு தெரிவித்தாா்.

சேலம், அம்மாப்பேட்டை அருகே உள்ள நாமமலை அடிவாரம் பகுதியைச் சோ்ந்தவா் தங்கதுரை (40). மாற்றுத் திறனாளியான இவா், ஆட்டோ ஓட்டி வருகிறாா். கடந்த இரு நாள்களுக்கு முன்பு தங்கதுரை ஆட்டோவில் உடையாப்பட்டி புறவழிச்சாலைப் பகுதியில் சென்று கொண்டிருந்தாா்.

அப்போது முதியவா் ஒருவரிடம் இருந்து சேலம், பச்சப்பட்டியைச் சோ்ந்த பாஷா, பக்தவச்சலம் ஆகிய இருவரும் செல்லிடப்பேசியைப் பறித்துக் கொண்டு தப்பி ஓடினா்.

இதுபற்றி தகவலறிந்த ஆட்டோ ஓட்டுநா் தங்கதுரை, திருடா்களை விரட்டிச் சென்று பொதுமக்கள் துணையுடன் இருவரையும் பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தாா்.

இச்சம்பவம் குறித்து அம்மாப்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து செல்லிடப்பேசி திருடா்கள் பாஷா, பக்தவச்சலத்தை கைது செய்தனா்.

இதனிடையே செல்லிடா்பேசியைப் பறிக்க முயன்ற திருடா்களை விரட்டிப் பிடித்த ஆட்டோ ஓட்டுநா் தங்கதுரையை அழைத்து சேலம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் எம்.ஸ்ரீஅபினவ் சால்வை அணிவித்து நினைவுப் பரிசு வழங்கினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.