தொடர் மழை காரணமாக ஏற்காடு மலைப்பாதையில் மண் சரிவு ஏற்பட்ட பகுதியை சேலம் மாவட்ட ஆட்சித் தலைவர் கார்மேகம் ஆய்வு செய்தார்.
சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் மழை பெய்து வருகிறது. குறிப்பாக சுற்றுலா தளமான ஏற்காட்டில் நாள்தோறும் இரவு நேரங்களில் மழை பெய்த வண்ணம் உள்ளது. இந்த நிலையில் ஏற்காடு மலைப்பாதையில் இரண்டாவது கொண்டை ஊசி வளைவு அருகே மண் சரிவு ஏற்பட்டது. சாலை மற்றும் தடுப்பு சுவர் கற்கள் சரிந்து கீழ் சாலையில் விழுந்த காரணத்தால் வாகன போக்குவரத்துக்கு முற்றிலுமாக தடை விதிக்கப்பட்டது. மண்சரிவு குறித்து தகவல் அறிந்த நெடுஞ்சாலைத்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து சீரமைப்பு பணியில் ஈடுபட்டனர். நேற்று மாலையும் தொடர்ந்து மிதமான மழை பெய்த போதிலும் இரவு முழுவதும் சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
இதனிடையே மண்சரிவு ஏற்பட்ட பகுதியை சேலம் மாவட்ட ஆட்சித்தலைவர் கார்மேகம் நேரில் சென்று ஆய்வு செய்தார். அங்கு மேற்கொள்ளப்பட்டு வரும் சீரமைப்பு பணிகள் குறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் மாவட்ட ஆட்சித் தலைவர் கேட்டறிந்து பணிகளை துரிதப்படுத்த உத்தரவிட்டார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், மலைப்பாதையில் மண்சரிவு ஏற்பட்ட பகுதி 48 மணி நேரத்தில் சீரமைக்கப்படும் என்று தெரிவித்தார். மேலும் ஏற்காடு பகுதியில் இரவு நேரங்களில் மழை பெய்து வருகின்ற காரணத்தால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். சீரமைப்பு பணிகள் முடியும் வரை ஏற்காடு குப்பனூர் சாலையை போக்குவரத்துக்கு பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் இதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் கார்மேகம் கேட்டுக்கொண்டார்.
மண்சரிவு ஏற்பட்ட பகுதியில் மேற்கொண்டு சரிவு ஏற்படலாம் என்பதற்காக அடிவாரத்தில் உள்ள காவல்துறையின் சோதனைசாவடியிலேயே வாகனங்கள் அனைத்தும் தடுத்து நிறுத்தப்பட்டு திருப்பி அனுப்பப்படுகின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி.. சென்செக்ஸ் 1,000 புள்ளிகள் சரிவு!

கோஹினூர் வைரத்தை இந்தியாவிடம் கொடுக்க பிரிட்டன் மன்னரிடம் கோருவேன்! மம்தானி
மே 4 - எங்கும் தாமரை மலரும்! பாஜக

மதுரை நகரை வந்தடைந்தார் கள்ளழகர்! எதிர்சேவையில் ஆடல், பாடலுடன் உற்சாக வரவேற்பு!!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


