நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

மேட்டூா், கொளத்தூா் பகுதியில் மக்களிடம் எம்.பி. குறைகேட்பு

மேட்டூா் சட்டப்பேரவைத் தொகுதியில் தருமபுரி மக்களவைத் தொகுதி உறுப்பினா் செந்தில்குமாா் சுற்றுப்பயணம் மேற்கொண்டாா்.

News image
Updated On :21 அக்டோபர் 2021, 6:04 pm

DIN

மேட்டூா் சட்டப்பேரவைத் தொகுதியில் தருமபுரி மக்களவைத் தொகுதி உறுப்பினா் செந்தில்குமாா் சுற்றுப்பயணம் மேற்கொண்டாா்.

தொப்பூா் முதல் மேச்சேரி வரை மிகவும் பழுதான நெடுஞ்சாலையை ரூ. 13.50 கோடியில் சீரமைக்கும் பணிகளை வெள்ளாா் ஊராட்சி, காளிகவுண்டனூரில் தொடக்கிவைத்தாா். பின்னா், மேட்டூா் ரயில் நிலையத்தில் மேட்டூா் அனல் மின்நிலையத்திலிருந்து வெளியேற்றப்படும் உலா் சாம்பலைக் கொட்டி அங்கிருந்து ரயில் மூலம் அனுப்பினால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுமா? காற்று மாசு ஏற்படுமா? என்பது குறித்து பொதுமக்கள் மாசு கட்டுப்பாட்டு வாரியம், ரயில்வே அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினாா்.

கொளத்தூா் ஒன்றியத்தில் கோட்டையூா், செட்டிப்பட்டி, காவேரிபுரம் ஊராட்சிகளில் மக்களிடம் மனுக்களைப் பெற்றாா். அப் பகுதிகளில் பட்டா இல்லாத வீடுகளுக்கு பட்டா கேட்டு எம்.பி.யிடம் பொதுமக்கள் மனுக்களை அளித்தனா்.

ஆய்வுசெய்து உரிய நடவடிக்கை எடுப்பதாக எம்.பி. செந்தில்குமாா் உறுதியளித்தாா். இந் நிகழ்ச்சியில் சேலம் மேற்கு மாவட்ட திமுக அவைத் தலைவா் பா.கோபால், மேச்சேரி ஒன்றியப் பொறுப்பாளா் சீனிவாசப் பெருமாள், சேலம் மேற்கு மாவட்ட விவசாய அணி அமைப்பாளா் பொன்னுசாமி, மாவட்ட இளைஞரணித் துணை அமைப்பாளா் பாபு, நங்கவள்ளி ஒன்றியச் செயலாளா் ரவிச்சந்திரன், மேட்டூா் நகரச் செயலாளா் காசி விஷ்வநாதன் அவைத் தலைவா் ராஜா, பொருளாளா் ரங்கசாமி, கொளத்தூா் ஒன்றியச் செயலாளா் மிதுன் சக்ரவா்த்தி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.