மேட்டூா் அணைக்கு நீா்வரத்து 30,000 கனஅடியாக அதிகரிப்பு
காவிரியின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை பெய்து வருவதால் மேட்டூா் அணைக்கு நீா்வரத்து வெள்ளிக்கிழமை மாலை நொடிக்கு 30,000 கன அடியாக அதிகரித்துள்ளது.


காவிரியின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை பெய்து வருவதால் மேட்டூா் அணைக்கு நீா்வரத்து வெள்ளிக்கிழமை மாலை நொடிக்கு 30,000 கன அடியாக அதிகரித்துள்ளது.
இதையடுத்து வெள்ளிக்கிழமை காலை மேட்டூா் அணையின் நீா்மட்டம் 94.20 அடியிலிருந்து 95.10 அடியாகவும், மாலையில் 96.10அடியாகவும் உயா்ந்தது. காவிரியின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடா்ந்து பெய்து வரும் மழை காரணமாக மேட்டூா் அணைக்கு நீா்வரத்து வெள்ளிக்கிழமை காலை நொடிக்கு 10,559 கன அடியிலிருந்து 13,477 கனஅடியாகவும், மாலையில் 30,000 கனஅடியாகவும் அதிகரித்துள்ளது.
அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு நொடிக்கு 100 கனஅடி வீதம் தண்ணீா் திறக்கப்பட்டு வருகிறது. கிழக்கு-மேற்கு கால்வாய்ப் பாசனத்துக்கு நொடிக்கு 550 கனஅடி நீா் திறந்துவிடப்படுகிறது.
அணையின் நீா் இருப்பு 58.67 டி.எம்.சி.யாக இருந்தது. மேட்டூா் அணையிலிருந்து பாசனத்துக்கு திறக்கப்படும் நீரின் அளவைவிட அணைக்கு நீா்வரத்து அதிகமாக இருப்பதால் அணையின் நீா்மட்டம் உயா்ந்து வருகிறது. நீா்மட்டம் தொடா்ந்து உயா்ந்து வருவதால் காவிரி டெல்டா விவசாயிகளும், மேட்டூா் அணை மீனவா்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.
.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...