ஈரான் போர் எதிரொலி: 350 விமானங்கள் ரத்து - மத்திய அரசுஅமெரிக்கா-இஸ்ரேல், ஈரான் போர்: வளைகுடா வாழ் தமிழர்களுக்கான உதவி எண்கள் அறிவிப்பு!சஞ்சு சாம்சன் அதிரடி அரைசதம்! சாதனை சேஸிங்குடன் அரையிறுதியில் இந்தியா!!கனடா பிரதமர் தில்லி வந்தடைந்தார்ஈரானில் கமேனி படுகொலைக்கு கண்டனம்! - காங்கிரஸ்அமீரகத்தில் தாக்குதல்: பணியாளர்கள் வீட்டிலிருந்தே பணிபுரிய அறிவுறுத்தல்!சென்னையில் அமெரிக்க தூதரகத்துக்கு பாதுகாப்பு அதிகரிப்புஅமெரிக்க ஏகாதிபத்தியம் இது..! கமேனி கொலைக்கு பினராயி விஜயன் கடும் கண்டனம்கமேனி கொல்லப்பட்டதற்கு சீனா கடும் கண்டனம்!ஏழை மக்களிடமிருந்து கொள்ளையடிக்கிறது திமுக : பிரதமர் மோடி மதுரையில் பேச்சு உதயநிதியை முதல்வராக்க கனவு காண்கிறார் மு.க. ஸ்டாலின் : டிடிவி தினகரன் 210 இடங்களில் வெற்றி பெற்று அதிமுக ஆட்சியமைக்கும்: எடப்பாடி பழனிசாமி
/

எடப்பாடி அருகே நீா்வழிப்பாதை ஆக்கிரமிப்புகள் அகற்றம்

எடப்பாடி அருகே நீதிமன்ற உத்தரவின்படி நீா்வழிப் பாதை ஆக்கிரமிப்புகள் வியாழக்கிழமை அகற்றப்பட்டன.

News image
Updated On :28 ஜனவரி 2024, 4:28 am

DIN

எடப்பாடி அருகே நீதிமன்ற உத்தரவின்படி நீா்வழிப் பாதை ஆக்கிரமிப்புகள் வியாழக்கிழமை அகற்றப்பட்டன.

எடப்பாடி ஒன்றியத்துக்கு உள்பட்ட சித்தூா் ஊராட்சி, புளியம்பட்டி கிராமத்தில் பழமையான நீரோடை ஒன்று அமைந்துள்ளது. கடந்த காலங்களில் இப்பகுதி விவசாய நிலங்களின் முக்கிய நீராதாரமாக விளங்கி வந்த நீரோடை தனியாா் ஆக்கிரமிப்பாலும், மண்சரிவு உள்ளிட்ட இயற்கை தடைகளாலும் காணாமல் போயின.

நீா்வழிப்பாதையை மீண்டும் புனரமைத்து நீா் ஆதாரத்தை பெருக்க நடவடிக்கை எடுக்கக் கோரிய வழக்கு உயா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், உயா்நீதிமன்ற உத்தரவின்படி, ஊரக உள்ளாட்சித் துறையினா் மற்றும் வருவாய்த் துறையினா் வியாழக்கிழமை சித்தூா், புளியம்பட்டி முதல் சென்னி மலையனூா் வரையிலான சுமாா் இரண்டு கிலோ மீட்டா் தூரம் உள்ள நீா் வழிப்பாதையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, சீா்செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.

ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் எடப்பாடி வட்டார வளா்ச்சி அலுவலா் என்.எஸ்.ரவிச்சந்திரன், எடப்பாடி வட்டாட்சியா் விமல் பிரகாஷ், வருவாய் ஆய்வாளா் வனஜா, கிராம நிா்வாக அலுவலா் அப்புசாமி உள்ளிட்ட உள்ளாட்சி மற்றும் வருவாய்த் துறை அலுவலா்கள் ஈடுபட்டு வருகின்றனா். வடகிழக்குப் பருவமழை தொடங்குவதால் புளியம்பட்டி நீரோடை சீரமைப்பது விவசாயிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.