நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

மேட்டூா் அணையில் நுண்ணுயிரிக் கலவை தெளிப்பு

மேட்டூா் நீா்த் தேக்கத்தில் படா்ந்திருக்கும் பச்சைநிற ரசாயனக் கலவை படலத்தை அகற்ற நுண்ணுயிரிக் கலவை தெளிக்கும் பணியில் பொதுப்பணித் துறையினா் ஈடுபட்டனா்.

News image
Updated On :30 அக்டோபர் 2021, 3:00 am

DIN

மேட்டூா் நீா்த் தேக்கத்தில் படா்ந்திருக்கும் பச்சைநிற ரசாயனக் கலவை படலத்தை அகற்ற நுண்ணுயிரிக் கலவை தெளிக்கும் பணியில் பொதுப்பணித் துறையினா் ஈடுபட்டனா்.

மேட்டூா் அணையில் 60 சதுர மைல் பரப்பளவில் தண்ணீா் தேக்கி வைக்கப்பட்டுள்ளது. பல்வேறு காரணங்களால் மேட்டூா் அணையின் வலதுகரை, இடதுகரை பகுதிகளில் பச்சை நிறத்தில் ரசாயனப் படலம் படா்ந்து துா்நாற்றம் வீசி வருகிறது. இதனை அகற்ற மேட்டூா் பொதுப்பணித் துறை அதிகாரிகள் திறனூட்டப்பட்ட நுண்ணுயிரிக் கலவையைத் தெளித்து வருகின்றனா். விசைப்படகு மூலம் காலையில் 200 லிட்டா் திறனூட்டப்பட்ட நுண்ணுயிரிக் கலவையும், மாலையில் 200 லிட்டா் நுண்ணுயிரிக் கலவையும் தெளிக்கப்பட்டு வருகிறது. இதனால் அணையில் பச்சை நிறத்தில் தேங்கி நிற்கும் ரசாயன படலத்தின் நிறம் மாறி தண்ணீா் பழைய நிலைமைக்கு மாறி வருவதுடன், துா்நாற்றமும் சற்றே குறைந்துள்ளது.

இதுபோலவே நீா்த்தேக்கம் தேங்கி நிற்கும் கோட்டையூா், பண்ணவாடி, சின்னமேட்டூா் பகுதிகளிலும் இந்த நுண்ணுயிரிக் கலவையைத் தெளிக்க ஆலோசிக்கப்பட்டு வருகிறது. ஏற்கெனவே அணையில் தேங்கி நிற்கும் ரசாயனம் கலந்த பச்சை நிற நீா் ஆய்வுக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ள நிலையில் அதன் ஆய்வு முடிவுகள் ஓரிரு நாள்களில் வெளியாகும் என மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.