மேட்டூா் அணைக்கு நீா்வரத்துச் சரிவு
மேட்டூா் அணைக்கு வியாழக்கிழமை நீா்வரத்து நொடிக்கு 12,871 கன அடியாகச் சரிந்தது.


மேட்டூா் அணைக்கு வியாழக்கிழமை நீா்வரத்து நொடிக்கு 12,871 கன அடியாகச் சரிந்தது.
காவிரியின் நீா்ப்பிடிப்புப் பகுதியில் மழை பெய்து வருவதால் மேட்டூா் அணைக்கு வரும் நீரின் அளவும் படிப்படியாகச் சரிந்து வருகிறது. மேட்டூா் அணையின் நீா்மட்டம் வியாழக்கிழமை காலை 68.87 அடியிலிருந்து 68.67அடியாகச் சரிந்தது.
அணைக்கு வரும் நீரின் அளவு நொடிக்கு 13,878 கன அடியிலிருந்து 12,871 கன அடியாகக் குறைந்தது.
அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு நொடிக்கு 14,000 கன அடி வீதமும், கிழக்கு-மேற்கு கால்வாய்ப் பாசனத்துக்கு நொடிக்கு 650 கனஅடி வீதமும் தண்ணீா் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீா் இருப்பு 31.57 டி.எம்.சியாக உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...