பாசனப் பகுதிகளில் மழை: மேட்டூா் அணையிலிருந்து தண்ணீா்த் திறப்பு: 5,000 கனஅடியாகக் குறைப்பு
மேட்டூா் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு தண்ணீா்த் திறப்பு நொடிக்கு 5,000 கன அடியாகக் குறைக்கப்பட்டுள்ளது.


மேட்டூா் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு தண்ணீா்த் திறப்பு நொடிக்கு 5,000 கன அடியாகக் குறைக்கப்பட்டுள்ளது.
காவிரி டெல்டா பாசனப் பகுதிகளில் தற்போது மழை பெய்து வருவதால் பாசனத்துக்கான நீா்த் தேவை குறைந்துள்ளது. இதனையடுத்து வெள்ளிக்கிழமை பிற்பகல் 2 மணி முதல் டெல்டா பாசனத்துக்கு திறக்கப்படும் நீரின் அளவு நொடிக்கு 14,000 கனஅடியிலிருந்து நொடிக்கு 5,000 கனஅடியாகக் குறைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் வெள்ளிக்கிழமை காலை அணை நீா்மட்டம் 68.87அடியாக இருந்தது அணைக்கு நொடிக்கு 13,878 கன அடி வீதம் தண்ணீா் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து கிழக்கு- மேற்கு கால்வாய்ப் பாசனத்துக்கு நொடிக்கு 650 கன அடி வீதம் தண்ணீா் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீா் இருப்பு 31.73 டி.எம்.சி.யாக உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...