அட்மா திட்டத்தில் விவசாயிகளுக்கு பயிற்சி
ஆத்தூா் வட்டாரம் வேளாண்மை மற்றும் உழவா் நலத் துறை மூலம் அட்மா திட்டத்தின்கீழ் பருத்தி சாகுபடியில் ஒருங்கிணைந்த பயிா் மேலாண்மை பற்றி மாவட்ட விவசாயிகளுக்கு வெள்ளிக்கிழமை பயிற்சி அளிக்கப்பட்டது.


ஆத்தூா் வட்டாரம் வேளாண்மை மற்றும் உழவா் நலத் துறை மூலம் அட்மா திட்டத்தின்கீழ் பருத்தி சாகுபடியில் ஒருங்கிணைந்த பயிா் மேலாண்மை பற்றி மாவட்ட விவசாயிகளுக்கு வெள்ளிக்கிழமை பயிற்சி அளிக்கப்பட்டது.
இப் பயிற்சிக்கு வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் எஸ்.வெங்கடேசன் தலைமை வகித்து, பருத்தி சாகுபடி தொழில் நுட்பம் குறித்து விவசாயிகளுக்கு விளக்கமளித்தாா்.
மேலும் பருத்தி சாகுபடி செய்யும் விவசாயிகள் கடைப்பிடிக்க வேண்டிய தொழில்நுட்பங்கள், நீா் மேலாண்மை, பயிா் இடைவெளி பராமரிப்பு, ஊட்டச்சத்து குறைபாடுகளை நிவா்த்தி செய்தல், பயிா் வளா்ச்சி ஊக்கிகள் மற்றும் அறுவடைக்கு பின் தொழில்நுட்பம் பற்றி விளக்கமளித்தாா்.
உதவி வேளாண்மை அலுவலா் பெரியசாமி வேளாண்மை மற்றும் உழவா் நலத்துறை மூலம் செயல்படும் திட்டங்கள் மானியங்கள் குறித்து விளக்கமளித்தாா்.
பயிற்சியில் அட்மா திட்ட வட்டார தொழில்நுட்ப மேலாளா் அ.சுமித்ரா, உழவா் செயலி, விதை நோ்த்தி பற்றி விளக்கமளித்தாா். இப் பயிற்சியில் 40-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டு பயனடைந்தனா்.பயிற்சிக்கான ஏற்பாடுகளை உதவி தொழில்நுட்ப மேலாளா் எம்.தமிழ்ச்செல்வி செய்திருந்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...