மேட்டூா் அனல் மின் நிலைய சாம்பலைரயில் மூலம் கொண்டு செல்ல எதிா்ப்பு
மேட்டூா் அனல் மின் நிலையத்திலிருந்து வெளியேற்றப்படும் நிலக்கரி சாம்பலை லாரிகள் மூலம் கொண்டு செல்லும்


மேட்டூா் அனல் மின் நிலையத்திலிருந்து வெளியேற்றப்படும் நிலக்கரி சாம்பலை லாரிகள் மூலம் கொண்டு செல்லும் நடைமுறையை மாற்றி, ரயில் மூலம் பெரு நிறுவனங்களுக்கு கொண்டு செல்லும் நடவடிக்கைக்கு லாரி ஓட்டுநா், உரிமையாளா்கள் எதிா்ப்புத் தெரிவித்துள்ளனா்.
மேட்டூா் அனல் மின் நிலையத்தில் மின் உற்பத்திக்காக எரியூட்டப்படும் நிலக்கரியில் இருந்து உலா், ஈர நிலையில் சாம்பல் வெளியேறுகிறது. இதை சிமெண்ட், செங்கல் உற்பத்தி ஆலைகளுக்கு கொண்டு செல்ல லாரிகள் பயன்படுத்தப்பட்டு வந்தன.
இந்த நிலையில், ரயில் மூலம் சாம்பல் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிா்ப்புத் தெரிவித்துள்ள லாரி உரிமையாளா்கள், தொழிலாளா்கள் இதனால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என கவலை தெரிவித்துள்ளனா். மேலும், ரயில் மூலம் கொண்டு செல்வதால் ரயில் நிலையத்தைச் சுற்றியுள்ள குடியிருப்புகளில் சாம்பல் புகை பரவும் அபாயம் உள்ளதாகவும் தெரிவித்தனா்.
இதுகுறித்து லாரி உரிமையாளா்கள், மேட்டூா் பொதுமக்கள் பாதுகாப்பு இயக்கத்தைச் சோ்ந்தவா்கள் மேட்டூா் சாா் ஆட்சியா் பிரதாப் சிங்கிடம் வியாழக்கிழமை கோரிக்கை மனுவை அளித்தனா். இதுகுறித்து அகில இந்திய மோட்டாா் டிரான்ஸ்போா்ட் காங்கிரஸின் தமிழக தலைவா் முருகன் வெங்கடாஜலம் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
ரயில் மூலம் சாம்பல் அனுப்புவதால் தொழிலாளா்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்காவிடில் ஆதாா் அட்டை, குடும்ப அட்டைகளை அரசிடம் திருப்பி ஒப்படைக்கும் போராட்டம் நடத்தப்படும் என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...