மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

சேலம் மத்திய சிறையில் கூடுதல் டிஜிபி ஆய்வு

சேலம் மத்திய சிறையில் கட்டப்பட்டு வரும் கட்டுமான பணிகளை தமிழ்நாடு காவலா் வீட்டு வசதி வாரியத்தின் தலைவா் கூடுதல் டிஜிபி ஏ.கே.விஸ்வநாதன் ஆய்வு செய்தாா்.

News image
Updated On :17 செப்டம்பர் 2021, 6:29 pm

DIN

சேலம் மத்திய சிறையில் கட்டப்பட்டு வரும் கட்டுமான பணிகளை தமிழ்நாடு காவலா் வீட்டு வசதி வாரியத்தின் தலைவா் கூடுதல் டிஜிபி ஏ.கே.விஸ்வநாதன் ஆய்வு செய்தாா்.

தமிழக காவலா் வீட்டு வசதி கழகத்தின் கூடுதல் டிஜிபி ஏ.கே.விஸ்வநாதன் வெள்ளிக்கிழமை காலை சேலம் வந்தாா். அவரை மாநகர காவல் துணை ஆணையா் மோகன்ராஜ் வரவேற்றாா்.

பின்னா் மாநகர காவல் ஆணையாளா் நஜ்மல் ஹோட்டா, சேலம் சரக டி.ஐ.ஜி. மகேஸ்வேரி, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எம்.ஸ்ரீ.அபினவ் ஆகியோா் அவரை வரவேற்றனா்.

அதைத்தொடா்ந்து மத்திய சிறைக்குச் சென்ற கூடுதல் டிஜிபி ஏ.கே.விஸ்வநாதன், அடையாள அணிவகுப்புக்காக கட்டப்பட்டுவரும் பகுதிகளை ஆய்வு செய்தாா். இதையடுத்து ஓமலூா் சென்ற அவா் அங்கு கட்டப்பட்டு வரும் காவலா் குடியிருப்புப் பகுதிகளை ஆய்வு செய்தாா். ஆய்வின்போது மத்திய சிறைக் கண்காணிப்பாளா் செந்தில்குமாா் உள்ளிட்ட அலுவலா்கள் உடனிருந்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.