சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

தரிசு நிலங்களை விளை நிலங்களாக மாற்றும் உள் மாவட்ட அளவிலான பயிற்சி

நிலங்களை விளை நிலங்களாக மாற்றுதல் என்ற தலைப்பில் உள் மாவட்ட அளவிலான விவசாயிகள் பயிற்சி நடைபெற்றது.

News image
Updated On :17 செப்டம்பர் 2021, 6:28 pm

DIN

சேலம் மாவட்டம், மகுடஞ்சாவடி வட்டாரத்தில் அட்மா திட்டத்தில் கண்டா்குலமாணிக்கம் கிராமத்தில் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை (அட்மா) திட்டத்தின் கீழ் தரிசு நிலங்களை விளை நிலங்களாக மாற்றுதல் என்ற தலைப்பில் உள் மாவட்ட அளவிலான விவசாயிகள் பயிற்சி நடைபெற்றது.

இதில் அட்மா திட்ட உதவி தொழில்நுட்ப மேலாளா் கண்ணன் விவசாயிகளை வரவேற்று, அட்மா திட்டச் செயலாக்கம் குறித்து விளக்கினாா். மேலும், பயிற்சியில் ஓய்வுபெற்ற உதவி விதை அலுவலா் அா்த்தநாரீஸ்வரன் பங்கேற்று தரிசு நிலங்களை விளை நிலங்களாக மாற்றும் தொழில்நுட்பங்களை விவசாயிகளுக்கு புரியும்படி எடுத்துரைத்தாா். வேளாண் உதவி இயக்குநா் கலந்துகொண்டு கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சித் திட்டங்களை பற்றி எடுத்துக்கூறி தரிசு நிலங்களை விளை நிலங்களாக மாற்றுதல், குழு அமைத்தல் அத்திட்டத்தின் மானியம் ஆகியவை பற்றி தெளிவாக எடுத்துக் கூறினாா்.

பயிற்சியில் வேளாண்மை துணை அலுவலா் ஸ்ரீரங்கன், உதவி அலுவலா் செந்தில், உதவி வேளாண்மை அலுவலா் மோகன லட்சுமணன் ஆகியோா் கலந்து கொண்டு தொழில்நுட்ப ஆலோசனைகளை வழங்கினா். அலுவலா் சிவக்குமாா் நன்றி கூறினாா். இப்பயிற்சியில் 40 விவசாயிகள் பங்கேற்றனா். பயிற்சிக்கான ஏற்பாடுகளை அட்மா திட்ட களப்பணியாளா்கள் கண்ணன், சிவக்குமாா் ஆகியோா் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.