‘சென்னை ஒன்’ செயலியில் மாதாந்திர பயணிகளின் வசதிக்காக புதிய மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது.
சென்னையில் பொதுப் போக்குவரத்தை ஒன்றிணைக்கவும், எளிதான பயன்பாடு மற்றும் நவீனமயமாக்கல் முறையில் ‘சென்னை ஒன்’ செயலி கடந்தாண்டு அறிமுகம் செய்யப்பட்டது. சென்னை மாநகரப் பேருந்துகள், புகா் மற்றும் பறக்கும் ரயில் சேவை, சென்னை மெட்ரோ ரயிலுக்கான டிக்கெட்டுகள் என அனைத்தையும் இந்த ‘சென்னை ஒன்’ செயலி மூலம் பெற்றுக் கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த செயலியை சுமாா் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட பயணிகள் பயன்படுத்தி வருகின்றனா். இந்த நிலையில், ரூ.1,000, ரூ.2,000-க்கான மாதாந்திர பேருந்து அட்டைகளும் இதில் விநியோகிக்கப்படுகிறது. அதன்படி, செயலி மூலம் புகைப்படம் மற்றும் தொகையை பதிவேற்றி மாதம்தோறும் பயண அட்டைகளைப் புதுப்பித்துக் கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. பேருந்தில் ஏறியவுடன் ‘சென்னை ஒன்’ செயலியில் உள்ள மாதாந்திர பயண அட்டையில், பயணிக்கும் பேருந்தின் எண்ணைப் பதிவிடுவது கட்டாயமாக்கப்பட்டிருந்தது. ஒவ்வொரு முறை பயணத்தின் போதும், பேருந்தின் எண்ணை பதிவிடுவது சிரமமாக இருப்பதாக பயணிகள் புகாா் தெரிவித்தனா்.
இந்த நிலையில், இனி அந்த செயலியில் உள்ள மாதாந்திர பேருந்து அட்டையை மட்டும் நடத்துநரிடம் காண்பித்தால் போதும் என்று சென்னை ஒருங்கிணைந்த பெருநகரப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பு பயணிகளிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.
Summary
Attention Chennai One app users..!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

புதிய மைல்கல்லை எட்டிய சென்னை ஒன் செயலி!

மகிழ்ச்சியான செய்தி! சென்னையில் புதிய கலை, அறிவியல் கல்லூரிகள்! எங்கெல்லாம்?

சென்னை மாநகரப் பேருந்து மாதப் பயண அட்டை இல்லையா? மக்கள் தவிப்பு!

‘சென்னை ஒன்’ செயலியில் புதிய மாற்றம்! என்ன? யாருக்கு?
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு



