

மாநகர் போக்குவரத்துக் கழகம் சார்பாக ‘சென்னை உலா’ சுற்றுலாப் பேருந்து சேவை இன்று (ஜன. 17) முதல் தொடங்கியுள்ளது.
சென்னை நகரின் பழமை மற்றும் வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களை கண்டுகளிக்க ஏதுவாக மாநகர் போக்குவரத்துக் கழகம் சார்பாக ‘சென்னை உலா’ சுற்றுலாப் பேருந்து சேவையை போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் ஜன. 14 ஆம் தேதி தொடங்கி வைத்தார். சென்னை உலா” பேருந்து - ஹாப்-ஆன் ஹாப்-ஆஃப் சேவைகளுடன், முதன்முதலில் 5 பேருந்துகள் அறிமுகப்படுத்தப்படுகின்றன.
இந்த பேருந்து சேவை இன்று முதல் தொடங்கியுள்ளதாக பெருநகர போக்குவரத்து கழகம் (சென்னை) தெரிவித்துள்ளது.
அவை சென்னையின் மையப்பகுதியில் உள்ள சின்னமான மற்றும் கலாசார ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை இணைக்க வட்டச்சுற்றுப் பாதையில் இயக்கப்படவுள்ளன.
சென்னையில் உள்ள முக்கிய வரலாற்று, கலாச்சார மற்றும் பொழுதுபோக்கு அடையாளங்களை இணைக்கும் வகையில் 30 கி.மீ நீளமுள்ள ஒரு வளையமாக இந்தப் பாதை திட்டமிடப்பட்டுள்ளது.
மெரீனா கடற்கரை, எழும்பூர் அருங்காட்சியகம், கலங்கரை விளக்கம், கண்ணகி சிலை உள்ளிட்ட 16 இடங்களைச் சுற்றிப் பார்க்கலாம்.
ஒரே ஒரு பயணச்சீட்டு மூலம் நாள் முழுவதும் பயணம் செய்வதற்குரிய கட்டணம் – ரூ. 50 மட்டுமே. சென்ட்ரல் ரயில் நிலையம், எழும்பூர் ரயில் நிலையம், மெரீனா கடற்கரை மற்றும் நடத்துநரிடம் இருந்து இதற்குரிய பயணச்சீட்டுகளை பெற்றுக் கொள்ளலாம். மேலும், சென்னை ஒன் செயலி வழியாக மின்னணு பயண சீட்டுகள் பெற்றுக் கொள்ளலாம்.
இந்த ஒரு பயணச்சீட்டை பயன்படுத்தி ஐந்து பேருந்துகளிலும் எத்தனை முறை வேண்டுமானாலும் பயணிக்கலாம் என்றும் பெருநகர போக்குவரத்து கழகம் (சென்னை) தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.