

சென்னை நகரின் பழமை மற்றும் வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களை கண்டுகளிக்க ‘சென்னை உலா’ சுற்றுலாப் பேருந்து சேவையின் கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் – “சென்னை உலா” - விருப்பத்திற்கேற்ப பயணிக்கும் சிறப்பு சுற்றுவட்ட பாரம்பரியப் பேருந்து இயக்க பேருந்து சேவை நேற்று(ஜன. 17) தொடங்கப்பட்டது.
“சென்னை உலா” பேருந்து - "ஹாப்-ஆன் ஹாப்-ஆஃப்" சேவைகளுடன், முதன்முதலில் 5 பேருந்துகள் அறிமுகப்படுத்தப்பட்டது.
மேலும், அவை சென்னையின் மையப்பகுதியில் உள்ள சின்னமான மற்றும் கலாசார ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை இணைக்க வடிவமைக்கப்பட்ட வட்டச் சுற்றுப் பாதையில் இயக்கப்படுகிறது, இதனால் பண்டிகைக் காலத்தில் நகரின் பாரம்பரிய அடையாளத்தை சென்னைவாழ் மக்கள் மற்றும் பார்வையாளர்கள் கண்டுகளிக்க முடியும்
இந்த நிலையில், ‘சென்னை உலா’ சுற்றுலாப் பேருந்தின் 24 மணி நேரப்படி, கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
சென்னையில் உள்ள முக்கிய வரலாற்று, கலாசார மற்றும் பொழுதுபோக்கு அடையாளங்களை இணைக்கும் வகையில் 30 கி.மீ. நீளமுள்ள ஒரு வளையமாக இந்தப் பாதை திட்டமிடப்பட்டுள்ளது.
மெரீனா கடற்கரை, எழும்பூர் அருங்காட்சியகம், கலங்கரை விளக்கம், கண்ணகி சிலை உள்ளிட்ட 16 இடங்களைச் சுற்றிப் பார்க்கலாம்.
பேருந்துகளில் உள்ள சிறப்பு சேவைகள்:
சென்னையில் உள்ள முக்கிய வரலாற்று, கலாச்சார மற்றும் பொழுதுபோக்கு அடையாளங்களை இணைக்கும் வகையில் 30 கி.மீ. நீளமுள்ள ஒரு வளையமாக இந்தப் பாதை திட்டமிடப்பட்டுள்ளது.
ஒரே ஒரு பயணச்சீட்டு மூலம் நாள் முழுவதும் பயணம் செய்வதற்குரிய கட்டணம் – ரூ. 50 மட்டுமே.
சென்ட்ரல் ரயில் நிலையம், எழும்பூர் ரயில் நிலையம், மெரீனா கடற்கரை மற்றும் நடத்துநரிடம் இருந்து இதற்குரிய பயணச்சீட்டுகளை பெற்றுக் கொள்ளலாம்.
மேலும், சென்னை ஒன் செயலி வழியாக மின்னணு பயண சீட்டுகள் பெற்றுக் கொள்ளலாம்.
மேலும் சொகுசுப் பேருந்து (Deluxe) கட்டணத்தில் மற்ற பேருந்துகளைப் போல இப்பேருந்தில் பயணிக்கலாம்.
பொங்கல் பண்டிகை காலத்தில் இந்த சேவை ஜனவரி 16–18 காலை 10 மணி முதல் இரவு 11 மணி வரையிலும் இயக்கப்படும்.
வார நாள்களில் மாலை 4 மணி முதல் இரவு 1 மணி வரையிலும், வார இறுதி நாள்கள்/பொது விடுமுறை நாள்களில் காலை 10 மணி முதல் இரவு 11 மணி வரையிலும் இயக்கப்படும்.
அடுத்தடுத்த பேருந்து சேவை 30 நிமிட இடைவெளியுடன் இருக்கும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.