ரூ. 50-ல் சென்னையைச் சுற்றிப் பார்க்க வேண்டுமா? சுற்றுலாப் பேருந்து சேவை தொடக்கம்!

சென்னை உலா சுற்றுலாப் பேருந்து சேவை தொடங்கப்பட்டுள்ளது தொடர்பாக...
சென்னை உலா சுற்றுலாப் பேருந்து.
சென்னை உலா சுற்றுலாப் பேருந்து.
Updated on
1 min read

சென்னை நகரின் பழமை மற்றும் வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களை கண்டுகளிக்க ஏதுவாக மாநகர் போக்குவரத்துக் கழகம் சார்பாக ‘சென்னை உலா’ சுற்றுலாப் பேருந்து சேவையை போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் இன்று(ஜன. 14) தொடக்கி வைத்தார்.

சென்னை அண்ணாசதுக்கம் பேருந்து நிலையத்தில், பழமை வாய்ந்த அரசுப் பேருந்துகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக கொண்டுவரப்பட்டது.

இந்தச் சுற்றுலாப் பேருந்தில் செல்ல ரூ. 50 கட்டணம் செலுத்தினால், காலை 10 மணிமுதல் இரவு 10 மணி வரை வார விடுமுறை நாள்களிலும், திங்கள் முதல் வெள்ளி வரை மாலை 4 மணி முதல் இரவு 10 வரை செல்லலாம்.

இந்தப் பேருந்துகள் ஒவ்வொரு அரை மணி நேரத்திற்கும் 18 இடங்களில் உள்ள பேருந்துகள் நிறுத்தங்களில் இடை விடாமல் சுற்றிக் கொண்டே இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பல்லவன் இல்லம், எழும்பூர் அருங்காட்சியகம், வள்ளுவர் கோட்டம், அண்ணா மேம்பாலம், கண்ணகி சிலை, மெரீனா கடற்கரை, சென்ட்ரல் ரயில் நிலையம், சாந்தோம் உள்ளிட்ட 18 இடங்களுக்கு சென்னை உலா சுற்றுலாப் பேருந்து இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை நகரின் பழமை மற்றும் வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களை கண்டுகளிக்க சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள, இந்தப் பேருந்து சேவையை போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் இன்று(ஜன. 14) தொடக்கி வைத்தார்.

Summary

The Chennai Ula tourist bus service has been launched.

சென்னை உலா சுற்றுலாப் பேருந்து.
பொங்கல் விடுமுறை: சிறப்புப் பேருந்துகளில் 6.90 லட்சம் பேர் பயணம்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com