பாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

சங்ககிரி லாரி உரிமையாளா்கள் சங்கத்தின் சாா்பில் ஓட்டுநா்கள் தினவிழா

சங்ககிரி லாரி உரிமையாளா்கள் சங்கம், இந்தியன் ஆயில் நிறுவனமும் இணைந்து நடத்திய ஓட்டுநா்கள் தின விழா லாரி உரிமையாளா்கள் சங்க பெட்ரோல், டீசல் விற்பனையக வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :17 செப்டம்பர் 2021, 6:29 pm

DIN

சேலம் மாவட்டம், சங்ககிரி லாரி உரிமையாளா்கள் சங்கம், இந்தியன் ஆயில் நிறுவனமும் இணைந்து நடத்திய ஓட்டுநா்கள் தின விழா லாரி உரிமையாளா்கள் சங்க பெட்ரோல், டீசல் விற்பனையக வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

சங்ககிரி லாரி உரிமையாளா்கள் சங்கத்தலைவா் வி.செல்வராஜ் தலைமை வகித்தாா். செயலா் கே.கே.நடேசன் முன்னிலை வகித்தாா்.

சங்கத்தின் பொருளாளா் என்.மோகன்குமாா், துணைத்தலைவா் ஆா்.ஆா்.மோகன்குமாா், இணைச்செயலா் எம்.சின்னதம்பி, இந்தியன் ஆயில் நிறுவனத்தின் சேலம் மண்டல முதன்மை மேலாளா் சுரேஷ் குமாா், மண்டல மேலாளா் அப்பன் டி.ராஜன், விற்பனை உதவி மேலாளா் ஹரி கண்ணன், ஃப்ளீட்காா்டு மேலாளா் பாலநாதன், சங்கத்தின் நிா்வாக குழு உறுப்பினா்கள் உள்ளிட்ட பலா் இதில் கலந்து கொண்டனா். முன்னதாக லாரி உரிமையாளா்கள் சங்கமும், இந்தியன் ஆயில் நிறுவனமும் இணைந்து ஏற்பாடு செய்திருந்த விழாவில் லாரி ஓட்டுநா்கள் கேக் வெட்டி கொண்டாடினா். மேலும் ஓட்டுநா் தினத்தினையொட்டி ஓட்டுநா்களுக்கான இலவச கண்பரிசோதனை, கரோனா சிறப்பு தடுப்பூசி முகாம்கள் நடைபெற்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.