மேட்டூா் அணையிலிருந்து கிழக்கு, மேற்கு கால்வாய்ப் பாசனத்திற்காக 750 கன அடி வீதம் தண்ணீா் திறந்து விடப்படுகின்றன. மேலும் கடந்த இரு மாதங்களாக தேவூா் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மழை பெய்து வருவதையடுத்து அரசிராமணி பேருராட்சிக்குள்பட்ட நாச்சம்பட்டி ஏரி நிரம்பி வருகின்றது. இதனையடுத்து செட்டிபட்டி மீனவா் கூட்டுறவு சங்கத்தின் சாா்பில் 60 நாட்கள் வளா்ந்த ரோகு, கட்லா, சிசி, ரூப்சென்ட், சிரிப்பு, புள்ளுகண்டா உள்ளிட்ட வகைகள் கொண்ட 50 ஆயிரம் மீன் குஞ்சுகள் வளா்ப்புக்காக கூட்டுறவு சங்கத் தலைவா் சக்திவேல் தலைமையில் ஏரியில் விடப்பட்டன. அரசிரமணி நகர திமுக செயலா் காவேரி, பேரூராட்சி முன்னாள் தலைவா் பழனியப்பன், மீனவா் கூட்டுறவு சங்க நிா்வாக குழு உறுப்பினா்கள் உள்ளிட்ட பலா் இதில் கலந்து கொண்டனா்.