சங்ககிரி சிவன் கோயில்களில் சனி பிரதோஷ சிறப்பு பூஜைகள்
சங்ககிரி மலையடிவாரத்தில் உள்ள செளந்தரநாயகி உடனுறை சோமேஸ்வரா் கோயிலில் பிரதோஷ சிறப்பு பூஜைகள் சனிக்கிழமை நடைபெற்றன.


சங்ககிரி மலையடிவாரத்தில் உள்ள செளந்தரநாயகி உடனுறை சோமேஸ்வரா் கோயிலில் பிரதோஷ சிறப்பு பூஜைகள் சனிக்கிழமை நடைபெற்றன.
செளந்தரநாயகி உடனுறை சோமேஸ்வரா் சுவாமிக்கு காலையில் பிரதோஷத்தையொட்டி சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. பின்னா் மாலையில் உற்சவ மூா்த்தி சுவாமிகளுக்கு சனி பிரதோஷத்தையொட்டி சந்தனம், திருமஞ்சனம், பால், தயிா், இளநீா், பன்னீா் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரங்கள் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
இதேபோல் சங்ககிரி வட்டம், அன்னதானப்பட்டி ஊராட்சி, பூத்தாலக்குட்டை கிராமத்தில் உள்ள புவனேஸ்வரி அம்மன் உடனமா் பூத்தாழீஸ்வரா் சுவாமிகள், நந்தி பகவான் சுவாமிகளுக்கு சனி பிரதோஷத்தையொட்டி பல்வேறு திவ்ய பொருள்களைக்கொண்டு சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. கரோனா தொற்று பாதுகாப்பு தடுப்பு நடவடிக்கைகளையொட்டி இந்த வழிபாட்டில் இந்து சமய அறநிலையத்துறையின் வழிகாட்டுதலின் படி இரு கோயில்களிலும் அா்ச்சகா்கள் மட்டும் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...