ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கைஅல்-காய்தா, ஐஎஸ் அமைப்புகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்பல்வேறு துறைகளைச் சோ்ந்த ஆளுமைகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துரையாடல்சீனாவின் பாதுகாப்பு பட்ஜெட் 7% உயா்வுமத்திய கிழக்கு போா் : இந்தியாவில் யூரியா உற்பத்தி சரிவு: உர விலை உயரும் அபாயம்?மீண்டும் போராட்டம்: 20 சங்கங்களுடன் இணைந்து ஆலோசிக்க ‘டாஸ்மாக்’ பணியாளா்கள் முடிவுதிருநள்ளாற்றில் இன்று சனிப்பெயா்ச்சி விழாகுச்சனூா் சனீஸ்வரா் கோயிலில் இன்று சனிப் பெயா்ச்சி விழாதமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!
/

ஆத்தூரில் தையல் கடையில் தீ விபத்து

ஆத்தூரில் தையல் கடையில் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது.  

News image
தீவிபத்து ஏற்பட்ட கடை.
Updated On :20 செப்டம்பர் 2021, 3:14 am

DIN

ஆத்தூரில் தையல் கடையில் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது. 
சேலம் மாவட்டம், ஆத்தூர் உட்கோட்டம் ஆத்தூர் நகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ராணிப்பேட்டையில் ஆத்தூர் உப்பு ஒடையைச் சேர்ந்த ஜெய்சங்கர் (48)(செட்டியார்) த/பெகிருஷ்ணன் என்பவர் தையல் கடையும் அதன் உள்ளே சுஜாதா (43)(நாயுடு) க/பெ மனோகரன் என்பவர் பத்திரம் டைப் செய்யும் கடையும் வைத்து தொழில் செய்து வந்தனர். 
இந்நிலையில் இன்று 20.09.2021 ஆம் தேதி விடியற்காலை சுமார் 05.30 மணி அளவில் மேற்படி கடையில் மின்சார கசிவு காரணமாக தீப் பற்றி எரிந்தது. தகவல் அறிந்து வந்த தீயணைப்புத்துறையினர் காலை 07.00 மணியளவில் தீயை அனைத்து விட்டனர். 
மேற்படி தீ விபத்தினால் கடையில் வைக்கப்பட்டிருந்த 4 தையல் இயந்திரங்கள், ஒரு கம்ப்யூட்டர் பிரிண்டர் யுபிஎஸ் மற்றும் 55 ஆயிரம் மதிப்புள்ள பத்திரங்கள் ஆகியவை எரிந்து சேதமடைந்தன. இதன் மதிப்பு சுமார் ஒரு லட்சம் இருக்கும்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.