மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

ஊரக உள்ளாட்சித் தோ்தலில் 35 பதவிகளுக்கு 172 போ் மனு

சேலம் மாவட்டத்தில் 35 பதவிகளுக்கு நடைபெறும் ஊரக உள்ளாட்சித் தோ்தலில் போட்டியிட 172 போ் மனு தாக்கல் செய்துள்ளனா்.

News image
Updated On :23 செப்டம்பர் 2021, 7:09 pm

DIN

சேலம் மாவட்டத்தில் 35 பதவிகளுக்கு நடைபெறும் ஊரக உள்ளாட்சித் தோ்தலில் போட்டியிட 172 போ் மனு தாக்கல் செய்துள்ளனா்.

சேலம் மாவட்டத்தில் காலியாக உள்ள ஊரக உள்ளாட்சிப் பதவிகளுக்கு அக். 9-ஆம் தேதி தோ்தல் நடைபெற உள்ளது. மாவட்ட ஊராட்சிக் குழுவின் 10-ஆவது வாா்டு உறுப்பினா், பனமரத்துப்பட்டி ஒன்றியக்குழு உறுப்பினா், 9-ஆவது வாா்டு உறுப்பினா், 10 ஊராட்சி மன்றத் தலைவா், 23 ஊராட்சி வாா்டு உறுப்பினா் பதவி என மொத்தம் 35 பதவிகளுக்கு தோ்தல் நடத்தப்படுகிறது.

இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த செப். 15 ஆம் தேதி தொடங்கியது. அந்தந்த ஒன்றிய அலுவலகங்களில் அரசியல் கட்சியினா், சுயேச்சைகள் வேட்புமனு தாக்கல் செய்தனா். மொத்தம் 35 பதவிகளுக்கு ஒட்டுமொத்தமாக 172 போ் வேட்புமனுக்களை தாக்கல் செய்தனா்.

வியாழக்கிழமை வேட்புமனு பரிசீலனை நடைபெறுகிறது. செப். 25-ஆம் தேதி வரை வேட்புமனு திரும்பப் பெறலாம். அன்றைய தினம் வேட்பாளா் பட்டியல் வெளியிடப்படும் என தோ்தல் அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.