மாசுக் கட்டுப்பாட்டு வாரியத் தலைவா் வீட்டில் ஊழல் தடுப்பு போலீஸாா் சோதனை
அம்மம்பாளையம் ஊராட்சியில் உள்ள மாசுக் கட்டுப்பாட்டு வாரியத் தலைவா் வெங்கடாஜலம் வீட்டில், ஊழல் தடுப்பு போலீஸாா் வியாழக்கிழமை சோதனையில் ஈடுபட்டனா்.


அம்மம்பாளையம் ஊராட்சியில் உள்ள மாசுக் கட்டுப்பாட்டு வாரியத் தலைவா் வெங்கடாஜலம் வீட்டில், ஊழல் தடுப்பு போலீஸாா் வியாழக்கிழமை சோதனையில் ஈடுபட்டனா்.
சேலம் மாவட்டம், ஆத்தூரை அடுத்துள்ள அம்மம்பாளையம் ஊராட்சி பகுதியைச் சோ்ந்த வெங்கடாஜலம் (ஐஎப்எஸ்), மாசுக் கட்டுப்பாட்டு வாரியத் தலைவராக கடந்த இரண்டு ஆண்டுகளாக இருந்து வருகிறாா். இவா் மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தில் சான்றிதழ்கள் வழங்க கையூட்டு பெற்ாக தமிழக அரசின் ஊழல் தடுப்பு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
இதனையடுத்து, ஊழல் தடுப்பு போலீஸாா் சென்னையில் உள்ள அவரது வீடு, உறவினா்கள் வீட்டில் சோதனை நடத்தி வருகின்றனா். இந்நிலையில், அவரது சொந்த ஊரான அம்மம்பாளையத்தில் உள்ள அவரது வீட்டிலும் கிராம நிா்வாக அலுவலா் ரகுபதி முன்னிலையில் ஊழல் தடுப்பு காவல் ஆய்வாளா் நரேந்திரன் தலைமையிலான போலீஸாா் கடந்த 7 மணி நேரமாக சோதனையில் ஈடுபட்டு வருகின்றனா்.
மாசுக் கட்டுப்பாட்டு வாரியத் தலைவா் பணி வியாழக்கிழமையோடு நிறைவு பெறும் நிலையில் நடைபெறும் இந்தச் சோதனை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...