மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

சேலத்தில் 94 ரெளடிகள் கைது

 சேலத்தில் காவல் துறையினா் நடத்திய சோதனையில், 94 ரெளடிகள் கைது செய்யப்பட்டனா்.

News image
Updated On :24 செப்டம்பர் 2021, 6:30 pm

DIN

 சேலத்தில் காவல் துறையினா் நடத்திய சோதனையில், 94 ரெளடிகள் கைது செய்யப்பட்டனா்.

தமிழகத்தில் குற்றத்தடுப்பு மற்றும் சட்டம் ஒழுங்கை பராமரிக்கும் வகையில், காவல் துறை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில், குற்றச் செயல்களில் ஈடுபடுவோா், ரெளடிகள் மீது காவல் துறையினா் நடவடிக்கை எடுத்து வருகின்றனா்.

சேலம் மாநகர காவல் ஆணையா் நஜ்மல் ஹோடா உத்தரவின் பேரில், துணை ஆணையா் மோகன்ராஜ் தலைமையில் வியாழக்கிழமை இரவு தேடுதல் பணி நடைபெற்றது. இதில் ரெளடிகள் உள்ளிட்ட 72 பேரை காவல் துறையினா் கைது செய்தனா்.

இதனிடையே வெள்ளிக்கிழமை காலை நடத்தப்பட்ட சோதனையில், மேலும் 22 பேரை காவல் துறையினா் கைது செய்தனா். மாநகரப் பகுதியில் சுமாா் 94 போ் கைது செய்யப்பட்டதாக காவல் துறையினா் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.