எல்பிஜி தட்டுப்பாடு எதிரொலி: புணேயில் எரிவாயு தகன மையங்களை மூட உத்தரவு!சென்னையில் வணிக எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை நிறுத்துவதாக இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனம் அறிவிப்புபெங்களூரில் வணிக சிலிண்டர்கள் நிறுத்தம்! நாளை முதல் ஹோட்டல்கள் மூடல்! மும்பையில் தட்டுப்பாடு!தேர்தலுக்காக மட்டும் நாம் கூட்டணி வைக்கவில்லை, கொள்கைக்காக கூட்டணி வைத்துள்ளோம் - மு.க. ஸ்டாலின்மகளிர் உரிமைத் தொகையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது : மு.க. ஸ்டாலின்திமுக ஆட்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு : திருச்சியில் மு.க. ஸ்டாலின் பேச்சுதலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!
/

எடப்பாடியில் அனைத்துக் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

எடப்பாடி அடுத்த கொங்கணாபுரம் பகுதியில் மத்திய அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அனைத்துக் கட்சியினரை போலீஸார் கைது செய்தனர். 

News image
எடப்பாடியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அனைத்துக் கட்சியினர்.
Updated On :27 செப்டம்பர் 2021, 6:42 am

DIN

எடப்பாடி அடுத்த கொங்கணாபுரம் பகுதியில் மத்திய அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அனைத்துக் கட்சியினரை போலீஸார் கைது செய்தனர். 
புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக் கோரியும், பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்கலுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், டீசல், பெட்ரோல், சமையல் எரிவாயு  உள்ளிட்ட எரிபொருட்களின் விலைகளை கட்டுக்குள் கொண்டுவர கோரியும் கம்யூனிஸ்ட் மற்றும் விடுதலை சிறுத்தை கட்சியினர் திங்கள் அன்று, கொங்கணாபுரம் பேருந்து நிலையம் அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 
ஒன்றிய செயலாளர் பழனியப்பன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், உடனடியாக புதிய வேளாண் சட்டங்களை மத்திய அரசு  ரத்து செய்யதிட கோரியும், எரிபொருள் விலையைக் கட்டுப்படுத்த கோரியும் மத்திய அரசிற்கு எதிராக தொடர் முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீஸார் கைது செய்து தனியார் அரங்கில் அடைத்தனர். 
ஆர்ப்பாட்டத்தில் சுமார் 50க்கும் மேற்பட்ட மார்க்சிஸ்ட் மற்றும் விடுதலை சிறுத்தை கட்சியைச் சேர்ந்தவர்கள் கலந்துகொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.